பாஷ்மினா ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஷ்மினா ஆடு, லடாக்.
பஷ்மினா முடியினாலான ஒரு துணி

பாஷ்மினா ஆடு என்பது திபெத் பீடபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளான திபெத் மற்றும் இந்தியாவின் காசுமீர் பகுதியைச் சேர்ந்த லடாக்கில் காணப்படும் ஒரு ஆட்டினமாகும். இமய மலையை ஒட்டிய பனி படர்ந்த பகுதிகளில் இந்த ஆடுகள் வாழ்கின்றன. குளிரைத் தாங்குவதற்கு ஏற்ப மென்மையான அடர் ரோமங்கள் இந்த ஆடுகளுக்கு உள்ளன. இந்த ஆட்டின் ரோமங்கள் 12-14 மைக்ரான் தடிமனில் மிக மென்மையாக இருப்பதால் இந்த ஆட்டின் ரோமங்களில் இருந்து செய்யப்படும் பாஸ்மினா சால்வைகளும், கம்பளங்களும் அதன் மென்மைத் தன்மைக்கு உலகப் புகழ்பெற்றவை.[1] தற்போது இந்த ஆடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த இன ஆடுகள் அழியாமல் இருப்பதற்கான முயற்சியைக் காஷ்மீரின் ஷெர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை எடுத்து, குளோனிங் முறையில் பாஷ்மினா ஆட்டை இந்தப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அன்று குளோனிங் முறையில் இந்த ஆடு உருவாக்கப்பட்டது. இந்த ஆட்டிற்கு நூரி எனப் பெயர் வைத்துள்ளார்கள்.[2][3]

மேறகோள்கள்[தொகு]

  1. "சர்வதேசப் பிரதிநிதிகளைக் கவர்ந்த காஷ்மீரின் "பாஷ்மினா' சால்வை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "இந்தியாவின் குளோனிங் ஆடு!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இந்தியாவில் குலோனிங் ஆடு". முத்தாரம். பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஷ்மினா_ஆடு&oldid=2760142" இலிருந்து மீள்விக்கப்பட்டது