பிச்சையெடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டோனின் சேவ்ருகுயின்-ஆல் 1880ல் தெகரன் நகரில் எடுக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரரின் புகைப்படம்.

பிச்சையெடுத்தல் (Begging) என்பது ஒரு மனிதர் பிறரிடம் தனது பிழைப்பிற்கு தேவையான பணமோ அல்லது பிற பொருளோ கேட்டல் ஆகும். இவ்வாறு கேட்டு பெறும் பணமோ அல்லது ஏதேனும் பொருளோ திருப்பி கொடுக்க வேண்டியதில்லை. இவ்வாறு பிச்சையெடுப்போரை பிச்சைக்காரன் என அழைப்பர்.

கனடிய மருத்துவ அமைப்பின் ஆய்வுப்படி, 70% பிச்சைக்காரர்கள் தனக்கு குறைந்த பட்ச சம்பள பணிக் கிட்டினாலும் தான் அதனைச் செய்ய விருப்பம் இல்லையென்றும் தெருக்களில் தான் இருக்க விரும்புவதாக கூறுகிறது. எப்படியாயினும், பலர் அவர்கள் மனநிலை பாதிப்பு காரணமாகவும், திறனற்ற நிலையினாலுமே இவ்வாறான நிலையில் தள்ளப்பட்டுள்ளனர் என எண்ணுகின்றனர்.

தடைச் சட்டங்கள்[தொகு]

தமிழ்நாட்டில் 1945இல் பிச்சையெடுப்பதைத் தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. அதுபோலவே, இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளிலும் பிச்சையெடுப்பதற்குத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் 2013 கீழ் பிச்சையெடுப்பவரைப் பிடியாணை இல்லாமல் கைதுசெய்ய வழிசெய்யப்பட்டுள்ளது. இதில் விசாரணையின்றி சிறை அல்லது முகாம்களில் அடைக்கும்வகையில் சட்டங்களைக் கடுமையாக்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ச.பாலமுருகன் (18 செப்டம்பர் 2018). "பிச்சையெடுப்பது பெருங்குற்றமா?". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சையெடுத்தல்&oldid=3577800" இலிருந்து மீள்விக்கப்பட்டது