ஆங்கில-சூலூ போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கில-சூலு போர்

உரோர்க் டிரிஃப்ட் சண்டையை விவரிக்கும் ஓவியம்
நாள் 11 சனவரி – 4 சூலை 1879
(5 மாதம்-கள், 3 வாரம்-கள் and 2 நாள்-கள்)
இடம் தென்னாப்பிரிக்கா
பிரித்தானிய வெற்றி;
சுதந்திர சூலு இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றுகை
பிரிவினர்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு சூலு இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் பேகன்சுபீல்டு கோமான்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் சேர் என்றி பார்டில் பிரெரே
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் செம்சுபோர்டு கோமான்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் கார்னெட் வொல்செலி
செட்சுவாயோ கம்பாண்டெ
இன்ட்சிங்வாயோ கோசா
டாபுலாமான்சி கம்பாண்டெ
பலம்
முதலாவது படையெடுப்பு:
15,000–16,000:[1]
  • 6,600 பிரித்தானிய துருப்புகள்
  • 9,000 ஆபிரிக்கர்கள்

17 பீரங்கிகள்
1 காட்லிங் துப்பாக்கி
1 ஏவுகணை தொகுப்பு
இரண்டாம் படையெடுப்பு:
25,000:[2][3]

  • 16,000 பிரித்தானிய துருப்புகள்
  • 7,000 நதால் பழங்குடிகள்
  • 2,000–3,000 குடிசார் போக்குவரத்து

10 பீரங்கிகள்
2 காட்லிங் துப்பாக்கிகள்

35,000[4]
இழப்புகள்
1,902 கொல்லப்பட்டனர்
256 காயமடைந்தனர்
6,930 கொல்லப்பட்டனர்[5]

ஆங்கில-சூலு போர் (Anglo-Zulu War) பிரித்தானியப் பேரரசுக்கும் சூலு இராச்சியத்திற்கும் இடையே 1879ஆம் ஆண்டு நடந்தது. 1867இல் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டாட்சி சட்டத்தைப் போன்று தென்னாப்பிரிக்காவிலும் ஆபிரிக்க இராச்சியங்கள், பழங்குடி பகுதிகள், பூர் குடியரசுகளை ஒன்றிணைக்கும் அரசியல் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டது. இம்முயற்சியில் வெற்றிபெற்ற போர்முறைகளையும் பின்பற்றியது. 1874ஆம் ஆண்டு இத்தகைய ஒன்றிணைப்பை உருவாக்கும் இலக்குடன் சர் என்றி பார்டில் பிரெரே பிரித்தானிய அரசின் உயர் ஆணையராக அனுப்பப்பட்டார். இந்த முயற்சிக்கு தன்னாட்சியுடன் விளங்கிய தென்னாப்பிரிக்க குடியரசும் சூலுலாந்து முடியாட்சியும் தடையாக இருந்தன.[6]

பிரெரே, பிரித்தானிய அரசின் அனுமதி பெறாமலே, தன்னிச்சையாகவும்[7][8] ஏற்கவியலாது என அறிந்தும் சூலுவுடன் போர் மூளத் தூண்டுதலாக சூலு அரசர் செட்சுவாயோவிற்கு திசம்பர் 11, 1878க்குள் உடன்படுமாறு ஓர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.[9] இதன் தொடர்ச்சியாக, இறுதி நாள் முடிந்தபிறகு செம்சுபோர்டு கோமானை சுலுலாந்தின்மீது படையெடுக்க அனுப்பினார். [10] இந்தப் போரில் பல கடுமையான, குருதிதோய்ந்த, சண்டைகள் நடந்தன. துவக்கத்தில் ஐசாண்டில்வானா சண்டையில் சூலுக்கள் வெற்றி பெற்றனர். இச்சண்டைகள் இப்பகுதியில் பேரரசுவாதத்திற்கான குறியீடுகளாக விளங்குகின்றன. இந்தப் போரில் இறுதியில் பிரித்தானியர் வென்று சூலு நாடு தனது தன்னாட்சியை இழந்தது. சூலு இராச்சியப் பகுதி நதால் குடியேற்றத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது; பின்னாளில் இது தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் அங்கமாயிற்று.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Colenso, 1880, pp. 263–264 gives 6,669 Imperial and Colonial troops and 9,035 Native Contingent. Morris,Donald R.; Buthelezi, Mangosuthu The Washing of the Spears, Da Capo Press, 1998, p.292, gives 16,800.
  2. Morris,Donald R. (1994) The Washing of the Spears, reissued: Da Capo Press, 1998, p.498.
  3. Colenso, 1880, p. 396, gives British strength in April as 22,545.
  4. Colenso, 1880, p.318, gives the total strength of the Zulu army at 35,000, of which 4,000 remained with Cetshwayo while the rest marched in two columns.
  5. Knight & Castle, Zulu War, 2004, p.115.
  6. Knight (1992, 2002), p. 8.
  7. Spiers, p. 41
  8. Ian Knight, Zulu War, Osprey, 2004, p. 9, "By late 1878 Frere had manipulated a diplomatic crisis with the Zulus..."
  9. Colenso, pp. 261–262. Also: Ian Knight, Zulu War, Osprey, 2004, p. 11, "... an ultimatum with which, Frere knew, they could not possibly comply."
  10. Morris, pp. 291–292
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில-சூலூ_போர்&oldid=2032382" இலிருந்து மீள்விக்கப்பட்டது