டார்லீன் சி. ஆப்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்லீன் சி. ஆஃப்மேன்
Darleane C. Hoffman
பிறப்பு(1926-11-08)நவம்பர் 8, 1926
டெரில், அயோவா
வாழிடம்அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஅணுக்கரு வேதியியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
கல்வி கற்ற இடங்கள்அயோவா மாநிலப் பல்கலைக்கழகம்

டார்லீன் சி. ஆஃப்மேன் (Darleane C. Hoffman, பிறப்பு: நவம்பர் 8, 1926) ஓர் அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர். இவர் சீபோர்கியம் என்ற 106-வது தனிமத்தின் நிலவலை உறுதிப்படுத்திய ஆய்வாளர்களில் ஒருவராவார். இவர் இலாரன்சு பி. பெர்க்கேலி ஆய்வகத்தின் முதுபுல அறிவியலாளர். மேலும் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகப் பட்டதாரிப் பள்ளியின் பேராசிரியரும் ஆவார்.[1]

இளமையும் கல்வியும்[தொகு]

டார்லீன் அயோவா மாநிலத்தில் டெரில் எனும் சிறுநகரில் பி. கார்ல், எல்வெர்னா குளூட் கிறித்தியான் ஆகிய இருவரின் மகளாகப் பிறந்தார்.[2] இவரின் தந்தையார் கணிதவியல் ஆசிரியரும் பள்ளிகளின் மேற்பார்வை அலுவலரும் ஆவார். இவரது தாயார் நடகங்களை எழுதி இயக்குபவராக விளங்கினார். இவர் அயோவா மாநிலப் பல்கலைக்கழக்க் கல்லூரியில் சேர்ந்து நெல்லி மே நாய்லரிடம் வேதியியல் பாடம் பயின்றுள்ளார்.[3] மேலும் இதே துறையில் மெல்படிப்பும் பயில முடிவு செய்துள்ளார்.[4] இவர் 1948 இல் வேதியியல் இளவல் பட்டமும் 1951 இல் அணுக்கரு வேதியியல் முட்னைவர் பட்டமும் அப்பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

டார்லீன் ஓராண்டுக்கு ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் பணிபுரிந்தார். பின்னர் தன்கணவருடன் இலாசு அலமோசு அறிவியல் ஆய்வகத்தில் இணைந்தார். இங்கு இவர் 1953 இல் பணியாளராகச் சேர்ந்தார்.இவர் 1979 இல் ஓரகத்தி, அணுக்கரு வேதியியல் பிரிவின் தலைமை ஏற்றுள்ளார்.இவர் 1984 இல் இங்கிருந்து விலகி ப்ர்க்கேலி பல்கலைக்கழக வளாகத்தில் வேதியியல் துறையில் சேர்ந்துள்ளார். மேலும் இவர் அங்கு இலாரன்சு பெர்க்கேலி அணுக்கரு ஆய்வகத்தில் அடர்தனிம அணுக்கரு, கதிரியக்க்க் குழுத் தலைமையும் ஏற்றுள்ளார். கூடுதல் பணியாக சீபோர்கு கதிர்வீச்சியல் நிறுவனத்தை நிறுவும் பணியும் 1991 இல் மேற்கொண்டுள்ளார். பின் அதன் முதல் இயக்குநராகவும் 1996 வரை செயல்பட்டுள்ளார். பிறகு ஓய்வு பெற்றதும் மூதறிவுரைஞராகவும் பட்டய இயக்குநராகவும் இருந்துள்ளார்.[5]

சொந்த வாழ்க்கை[தொகு]

முனைவர் பட்டம் பெற்றதுமே இவர் மார்வின் எம். ஃஆஃப்மேன் என்ற இயற்பியலாளரை மணந்தார்.[4] இவர்களுக்கு இருகுழந்தைகள் பிறந்தனர். மவுரீன், டாரில் எனும் இவ்விருவரும் இலாசு அலமாசில் பிறந்தனர்.[6]

விருதுகள்[தொகு]

  • பிரீசுட்லி பதக்கம், 2000 (மேரி எல். கோல்டுவுக்குப் பின் (1997) இப்பதக்கத்தைப் பெற்றவர் இவரே)
  • தேசிய அறிவியல் பதக்கம், 1997
  • கர்வாந் ஓலின் பதக்கம், 1990
  • உட்கரு வேதியியல் ACS விருது, 1983 (இவ்விருதைப் பெறும் முதல் பெண்மணி)
  • குக்கன்ஃஈம் உறுப்பினர், 1978
  • நார்வே அறிவியல், எழுத்து கல்விக்கழகத்தின் உறுப்பினர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Darleane Hoffman, Harold Johnston to Receive National Medal of Science". Archived from the original on 2005-11-16. பார்க்கப்பட்ட நாள் 2016-02-26.
  2. ""Elverna E. Christian," Plaza of Heroines, Iowa State University". Archived from the original on 2013-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-02-26.
  3. "Nellie May Naylor". History of Iowa State: People of Distinction. Iowa State University. Archived from the original on 8 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Darleane Hoffman: Adventures in the nature of matter". Catalyst Magazine (College of Chemistry, University of California, Berkeley) 6 (2). 1 February 2012. http://catalyst.berkeley.edu/v6n2/hoffman-adventures-in-matter/. பார்த்த நாள்: 19 May 2014. 
  5. "Keynote speaker: D. Hoffman, Ph.D." LLNL 2020: Women Forging the Future of Science and Technology. Lawrence Livermore National Laboratory. Archived from the original on 4 ஆகஸ்ட் 2004. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Darleane (Christian) Hoffman bio page பரணிடப்பட்டது 2010-06-12 at the வந்தவழி இயந்திரம், Cyclotron Institute, Texas A&M University
  7. "Gruppe 8: Teknologiske fag" (in Norwegian). Norwegian Academy of Science and Letters. Archived from the original on 27 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்லீன்_சி._ஆப்மேன்&oldid=3575330" இலிருந்து மீள்விக்கப்பட்டது