புருலியா மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°20′N 86°22′E / 23.333°N 86.367°E / 23.333; 86.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புருலியா மாவட்டம்
পুরুলিয়া জেলা
புருலியாமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வர்தமான் கோட்டம்
தலைமையகம்புருலியா
பரப்பு6,259 km2 (2,417 sq mi)
மக்கட்தொகை2,927,965 (2011)
மக்கள்தொகை அடர்த்தி468/km2 (1,210/sq mi)
படிப்பறிவு65.38%
பாலின விகிதம்957
மக்களவைத்தொகுதிகள்3
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை11
முதன்மை நெடுஞ்சாலைகள்3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
ஜோய்சண்டி பாகர், சுற்றுலா மையம், புருலியா மாவட்டம்

புருலியா மாவட்டம் (Purulia district) (வங்காள மொழி: পুরুলিয়া জেলা) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். புருலியா நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

6259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் கிழக்கில் பாங்குரா மாவட்டம் மற்றும் மேற்கு மிட்னாபூர் மாவட்டம், வடக்கில் வர்தமான் மாவட்டம் மற்றும் தன்பாத் மாவட்டம் (ஜார்கண்ட் மாநிலம்), மேற்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் போகாரோ மாவட்டம் மற்றும் ராஞ்சி மாவட்டம், தெற்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டம் மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.

தட்பவெப்பம்[தொகு]

புருலியா மாவட்டம் மேற்கு வங்காள மாநிலத்தின் மிகவும் வறட்சி மிக்க மாவட்டம் ஆகும். கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பம் 52 பாகை செல்சியஸ்க்கும், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 2.8 பாகை செல்சியஸ்க்கும் கீழும் சென்றுவிடும். [1] இம்மாவட்டத்தின் சராசரி மழைபொழிவு 1100 முதல் 1500 மில்லி மீட்டராகும்.

பொருளாதாரம்[தொகு]

தொழில் துறையே இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதார காரணியாக உள்ளது. மேலும் பட்டு பூச்சி வளர்த்தல், மரப்பிசின் தயாரித்தல் கிராமப்புற தொழில்களாகும். நீர் ஆதாரம் குறைவால் வேளாண்மை சிறிதளவே நடைபெறுகிறது. இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

புருலியா மாவட்டம் புருலியா சதர் கிழக்கு, புருலியா சதர் மேற்கு மற்றும் இரகுநாத்பூர் என மூன்று உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

புருலியா சதர் கிழக்கு உட்கோட்டம் புருலியா நகராட்சி மன்றம் மற்றும் மான்பஜார்–I, மான்பஜார்–II, பந்த்வான், புருலியா–I, புருலியா–II, ஹுரா மற்றும் பூஞ்சா என ஏழு வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது.

புருலியா சதர் மேற்கு உட்கோட்டம் ஜால்தா நகராட்சி மன்றம் மற்றும் ஜல்தா–I, ஜல்தா–II, ஜெய்பூர், அர்சா, பாக்முண்டி, பலராம்பூர் மற்றும் பாராபஜார் என ஏழு வட்டார வளர்ச்சி அலுவலங்கங்களை கொண்டுள்ளது.

இரகுநாத்பூர் உட்கோட்டம் இரகுநாத்பூர் நகராட்சி மன்றம் மற்றும் பாரா, இரகுநாத்பூர்–I, இரகுநாத்பூர் –II, நெச்சுரியா, சஞ்சுரி மற்றும் காஷிப்பூர் என ஆறு வட்டார வளர்ச்சி அலுவலகங்களை கொண்டுள்ளது. [2][3] புருலியா மாவட்டம் 2459 கிராமங்களை இம்மாவட்டம் கொண்டுள்ளது.[4]

அரசியல்[தொகு]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

புருலியா மாவட்டம் 1. பந்த்வான் சட்டமன்ற தொகுதி 2. பலராம்பூர் சட்டமன்ற தொகுதி 3. பாக்முண்டி சட்டமன்ற தொகுதி 4. ஜோய்பூர் சட்டமன்ற தொகுதி 5. புருலியா சட்டமன்ற தொகுதி 6. மான்பஜார் சட்டமன்ற தொகுதி 7. காசிப்பூர் சட்டமன்ற தொகுதி 8. பாரா சட்டமன்ற தொகுதி 9. இரகுநாத்பூர் சட்டமன்ற தொகுதி 10. ஹூரா சட்டமன்ற தொகுதி 11 அர்சா சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[5]

மக்களவை தொகுதிகள்[தொகு]

புருலியா மக்களவை தொகுதி, பந்த்வான் மக்களவை தொகுதி (பகுதி), மற்றும் பாங்குரா மக்களவை தொகுதி (பகுதி) என மூன்று மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,930,115 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,496,996 மற்றும் பெண்கள் 1,433,119 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 957 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 468 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 64.48% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.86% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 50.52% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 410,227 ஆக உள்ளது.[6]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 2,373,120 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 227,249 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 8,646 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 8,188 ஆகவும், பிற சமயத்தவர்களின் மக்கள்தொகை கணிசமாக உள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்து சமயத்தினர் 80.99 % ஆகவும், இசுலாமிய சமயத்தினர் 7.76 %ஆகவும் உள்ளனர்.

போக்குவரத்து[தொகு]

தொடருந்து[தொகு]

ஏழு நடைமேடைகள் கொண்ட புருலியா தொடருந்து நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு எழுபத்து நான்கு தொடருந்து வண்டிகள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் இருப்புப்பாதை போடப்பட்டுள்ளது.[7]

சாலை வசதிகள்[தொகு]

புருலியா மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 32, தேசிய நெடுஞ்சாலை எண் 60எ மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 9 ஆகியவைகள் நாட்டின் பல பகுதிகளுடன் தரை வழியாக இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile of the district, Purulia Zilla Parisad" (PDF). Archived from the original (PDF) on 4 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2013.
  2. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas". West Bengal. Directorate of census operations. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.
  3. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 2008-03-19. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2008-11-12.
  4. "Administrative Units". Purulia district. National Informatics Centre. Archived from the original on 2007-12-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.
  5. "General election to the Legislative Assembly, 2001 – List of Parliamentary and Assembly Constituencies" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-04-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-16.
  6. http://www.census2011.co.in/census/district/14-puruliya.html
  7. http://indiarailinfo.com/arrivals/purulia-junction-prr/1468

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Purulia District


"https://ta.wikipedia.org/w/index.php?title=புருலியா_மாவட்டம்&oldid=3890692" இலிருந்து மீள்விக்கப்பட்டது