டிக்கிரி பண்டா சுபசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிக்கிரி பண்டா சுபசிங்க
Tikiri Banda Subasinghe
தொழிற்சாலைகள் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
மே 1970 – 1 மார்ச் 1977
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்னவர்சிறில் மத்தியூ
சோவியத் ஒன்றியத்துக்கான 2வது இலங்கைத் தூதுவர்
பதவியில்
1961–1965
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
முன்னையவர்குணபால பியசேன மலலசேகரா
பின்னவர்பி. எஃப். பெரேரா
6வது நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில்
30 மார்ச் 1960 – 23 ஏப்ரல் 1960
பிரதமர்டட்லி சேனாநாயக்க
முன்னையவர்அமீது உசைன் சேக் இசுமாயில்
பின்னவர்ஆர். எஸ். பெல்பொல
பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர்
பதவியில்
1956–1959
பிரதமர்சாலமன் பண்டாரநாயக்கா
இலங்கை நாடாளுமன்றம்
for பிங்கிரிய
பதவியில்
1947 – மார்ச் 1960
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்லீலானந்த வீரசிங்க
இலங்கை நாடாளுமன்றம்
for கட்டுகம்பொல
பதவியில்
1965–1977
முன்னையவர்லீலானந்த வீரசிங்க
பின்னவர்ஜெயவிக்கிரம பெரேரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஆகத்து 1913
பிரித்தானிய இலங்கை
இறப்பு1995 (அகவை 81–82)
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி (1965-1977)
பிற அரசியல்
தொடர்புகள்
லங்கா சமசமாஜக் கட்சி (-1955)
சுயாதீன சோசலிசக் கட்சி (1955-1959)
ஐக்கிய தேசியக் கட்சி (1959)
சுயேட்சை (1960-1965)
துணைவர்லொலித்தா சுபசிங்க

டி. பி. சுபசிங்க என அழைக்கப்படும் சுபசிங்க முதியான்சிலாகே டிக்கிரி பண்டா சுபசிங்க (Subasinghe Mudiyanselage Tikiri Banda Subasinghe, 14 ஆகத்து 1913 - 1995) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்றத்தின் 7வது சபாநாயகராகவும், சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராகவும் பணியாற்றியவர்.[1][2] இவர் தொழிற்சாலைகள் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[3]

சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராவார். இடதுசாரிகள் இணைந்து நடத்திய சூரிய-மல் இயக்கத்தில் இணைந்து போராடியவர்.[1] சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் வேட்பாளராக 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்..[4] மீண்டும் 1952 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 1956 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[6] சாலமன் பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் இவர் பாதுகாப்பு, மற்றும் வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][3] மார்ச் 1960 தேர்தலில் கட்டுகம்பொலை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து,[7] நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்களின் பின்னர் நடைபெற்ற சூலை 1960 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8] 1961 ஆம் ஆண்டில் இவர் சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். 1965 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9] 1970 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[10] 1977 தேர்தலில் போட்டியிட்டுப் பெரும் தோல்வியடைந்தார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "T.B. Subasinghe commemoration". டெய்லிநியூசு. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Rupasinghe, Winston. "Revisiting our Russian friends". Sundayobserver. Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "SUBASINGHE, Tikiri Banda (1913-1995), research papers on". AIM25. Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  5. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  6. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  7. "Result of Parliamentary General Election March 1960" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  8. "Result of Parliamentary General Election July 1960" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  9. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  10. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  11. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்கிரி_பண்டா_சுபசிங்க&oldid=3556632" இலிருந்து மீள்விக்கப்பட்டது