2015 அசாம் வெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2015 அசாம் வெள்ளம் (2015 Assam floods)  என்பது இந்திய நாட்டின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆறு மற்றும் அதன் கிளை நதிகளில் ஆகத்து மாத இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் குறிக்கும். அண்டை மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக இவ்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இம்மழை வெள்ளத்தால் 21 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாயின. 42 பேர் உயிரிழந்தனர். மற்றும் ஆங்காங்கே பல நிலச்சரிவுகள், சாலை அடைப்புக்கள் போன்ற காரணங்களால் 1.65 மில்லியன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் மொத்தமாக 2,100 கிராமங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயின.[1] மாநிலத்தில் உள்ள 440,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் அழிந்துபோயின.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Assam Floods Update: 42 lives claimed so far". Skymet Weather Services. September 8, 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
  2. "Over 1.5 million people hit by floods in Assam". ராய்ட்டர்ஸ். September 7, 2015. Archived from the original on செப்டம்பர் 28, 2015. பார்க்கப்பட்ட நாள் September 27, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Assam floods: Four more dead, toll rises to 24". இந்தியன் எக்சுபிரசு. September 3, 2015. பார்க்கப்பட்ட நாள் September 27, 2015.
  4. "Assam Flood Kill 4, Over 2,000 Villages Still Under Water". என்டிடிவி. September 6, 2015. பார்க்கப்பட்ட நாள் September 27, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2015_அசாம்_வெள்ளம்&oldid=3926858" இலிருந்து மீள்விக்கப்பட்டது