கல்லீரல் அழற்சி வகை ஏ தடுப்பூசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லீரல் அழற்சி வகை ஏ தடுப்பூசி
Vaccine description
Target disease Hepatitis A
வகை Killed/Inactivated
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Havrix
AHFS/திரக்ஃசு.காம் Consumer Drug Information
மெட்லைன் ப்ளஸ் a695003
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை Safety undetermined, risk likely low
சட்டத் தகுதிநிலை Rx-only (US)
வழிகள் IM
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு J07BC02
ChemSpider none N

கல்லீரல் அழற்சி வகை A தடுப்பூசி என்பது தடுப்பூசி கல்லீரல் அழற்சி வகை A ஐ தடுக்கவல்லது.[1] இந்த தடுப்பூசி 95 % நோயாளிகளுக்கு திறம்பட செயல்படுகிறது,மேலும் அதன் வீரியம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு இருக்கும் அல்லது ஒரு நபரின் வாழ் நாள் முழுதும் பலனளிக்கும். .[2][1] ஒரு வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் இந்த தடுபூசி இரு முறை போட பரிந்துரைக்கபடுகிறது. அது தசைக்குள் உட்செலுத்தப்படும்.[1]

பரிந்துரைகள்[தொகு]

உலக சுகாதார அமைப்பு (WHO) பொதுவாக இந்த நோய் மிதமாக பரவீயிருக்கும் இடங்களில் எல்லோருக்கும் இந்த தடுப்பூசி போடவேண்டும் என பரிந்துரைக்கிறது. பொதுவாக இந்த நோய் மிதமாக பரவீயிருக்கும் இடங்களில் எல்லோருக்கும் இந்த தடுப்பூசி போடவேண்டும் என பரிந்துரைக்கிறது. இந்த நோய் வழக்கமானதாக இருந்தால் பரவலாக எல்லோருக்கும் தடுப்பூசி போட பரிந்துரைக்கபடுவதில்லை,காரணம் சிறுவர்களுக்கு தொற்று மூலம் தானாகவே எதிர்ப்பு சக்தி உருவாகி விடும். [1] நோய் கட்டுப்படு மற்றும் தடுப்பு மையம் (CDC)அதிக ஆபத்துக்குட்பட்ட பெரியவர்களுக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட பரிந்துரைக்கிறது [3]

முறைப்படி பாதுகாப்பு உருவாக்குதல்[தொகு]

கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிது. தடுப்பூசி போட்ட இடத்தில் வலி 15 % குழந்தைகளுக்கும்  பேர்பாதி பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லீரல் அழற்சி வகை A தடுப்பூசியில் வீரியம் அழிக்கபட்ட நுண்ணுயிர்கள் இருக்கும், இன்னும் சிலவற்றில் பலவீனபட்ட நுண்ணுயிர்கள் இருக்கும். பலவீனமான நுண்ணுயிர்கள் கொண்ட தடுப்பூசி கர்ப்பம் தரித்திருக்கும் போது அல்லது மோசமான நோய் தடுப்பு செய்லபாடு உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கபடுவதில்லை. சில வகை கல்லீரல் அழற்சி A தடுப்பூசிகள்,  கல்லீரல் அழற்சி வகை B அல்லது குடற்காய்ச்சல் தடுப்பூசி யுடன் சேர்ந்த கலவையாக கிடைக்கிறது.[1]

வரலாறு,சமூகம் மற்றும் கலாச்சாரம்[தொகு]

கல்லீரல் அழற்சி வகை A தடுப்பூசி முதன் முதலில் 1991 இல் ஐரோப்பாவிலும் 1995 இல் அமெரிக்காவிலும் அங்கீகரிக்கபட்டது.[4] இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல்,இல் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான அடிப்படை சுகாதார அமைப்பு க்கு தேவையான மருந்து.[5] அமெரிக்காவில் இந்த மருந்தின் விலை 50 USD யிலிருந்து 100 USD க்குள் இருக்கும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "WHO position paper on hepatitis A vaccines – June 2012.". Wkly Epidemiol Rec 87 (28/29): 261-76. 2012 Jul 13. பப்மெட்:22905367. http://www.who.int/wer/2012/wer8728_29.pdf. 
  2. Ott JJ, Irving G, Wiersma ST (December 2012). "Long-term protective effects of hepatitis A vaccines. A systematic review". Vaccine 31 (1): 3–11. doi:10.1016/j.vaccine.2012.04.104. பப்மெட்:22609026. 
  3. "Hepatitis A In-Short". CDC. July 25, 2014. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  4. Patravale, Vandana; Dandekar, Prajakta; Jain, Ratnesh (2012). Nanoparticulate drug delivery perspectives on the transition from laboratory to market (1. publ. ). Oxford: Woodhead Pub.. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781908818195. https://books.google.ca/books?id=VWdEAgAAQBAJ&pg=PA212. 
  5. "19th WHO Model List of Essential Medicines (April 2015)" (PDF). WHO. April 2015. பார்க்கப்பட்ட நாள் May 10, 2015.
  6. Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. பக். 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781284057560.