பவானி ஜமக்காளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானி ஜமக்காளம்

பவானி ஜமக்காளம்தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதியான, பவானியில் தயாரிக்கப்படும் போர்வைகளையும், விரிப்புகளையும் குறிக்கின்றது.[1][2] இது புவியியல் சார்ந்த குறியீடாக 2005-06 ஆண்டுகளில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.[3]

வரலாறு[தொகு]

19-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய ஆடைகளுக்குப் போட்டியில் இந்திய நெசவாளர்கள் புதுரக ஆடைகளை உருவாக்க தொடங்கினர். [2] பவானியைச் சேர்ந்த ஜங்கன்மார்கள் என்ற ஒரு பிரிவினர் பலநிற சொரசொரப்பான நூல்களைக் கொண்டு புது வகையான போர்வையை ஜமக்காளம் என்ற பெயரில் உருவாக்கினர்.[4] இவ்வகையான தயாரிப்பு பிரபலமானதையடுத்து பிற ஆடைகள், சேலைகள் நெய்யும் நெசவாளர்களையும் கவர்ந்தது, அவர்களும் ஜமக்காளம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.[4]

வகைகள்[தொகு]

பவானியில் உருவாக்கப்பட்ட ஜமக்காளங்கள்

இருவேறு வகையான ஜமக்காளங்களை பவானியில் தயாரிக்கின்றனர்.[5] முதல் வகை சொரசொரப்பான பலநிற பருத்தி நூல்களைக் கொண்ட விரிப்புகள்.[5] சொரசொரப்பான நூல்களால் சரியான முறையில் இவ்வகையில் வடிவமைவுகளை நெய்ய இயலாது.[5] எனவே இரண்டாவது வகையான ஜமக்காளங்களை அறிமுகம் செய்தனர், அதைத் தயாரிக்க செயற்கை பட்டு நூல்களைப் பயன்படுத்தினர்.[5] ஜமக்காளங்களைத் தோள்பை தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.[6]

சமூகம்[தொகு]

பொதுவாக, ஜமக்காளங்கள் நெசவாளர்களின் வீடுகளில் நெய்யப்படும்.[7] ஒரு சில இடங்களில் தறிப்பட்டறைகளில் இது நெய்யப்படும்.[8] கூலிக்காக பலர் தறிப்பட்டறைகளில் நெய்வர். ஜமக்காளத்திற்கான நூல்கள் ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், கரூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பெறப்படும்.[9] சுமார் 1000 பெண்கள் உட்பட 1500 நபர்கள் ஜமக்காளம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.[10]

நெசவுத் தறி[தொகு]

ஜமக்காளம் நெய்வதற்கு குழித்தறி என்னும் ஓர் வகையான கைத்தறி பயன்படுத்தப்படுகிறது.[10] இது மரத்தினால் செய்யப்பட்டு இருக்கும்; நூற்பாவு கிடைநிலையில் அமைந்து இருக்கும்.[10] நெசவாளர் குழியில் அமர்ந்திருப்பர்.[10] இரு மிதிகளையும், குஞ்சத்தையும் கொண்டிருக்கும்.[10]

ஏற்றுமதி[தொகு]

பவானியில் தயாரிக்கப்படும் ஜமக்காளம், சுவீடன், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.[11] 1993-ம் ஆண்டு, சுவீடனின் ஐ.கே.இ.ஏ, அதனுடைய கிளைகளில் விற்பனை செய்வதற்காக, பவானி ஜமக்காளங்களை கொள்முதல் செய்ய ஆரம்பித்தது.[11]

போட்டி[தொகு]

2000-ம் முதல், குழித்தறியில் நெய்யப்பட்ட ஜமக்காளங்கள், விசைத்தறிகளிடம் போட்டி போட முடியாமல் போனது.[12] தமிழ்நாடு அரசு, குழித்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கியும், விசைத்தறி பயன்படுத்துவதை குறைக்க சட்ட மாறுதல் செய்தும் உதவியது.[12] தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் வாயிலாக தமிழ்நாடு அரசு பவானி ஜமக்காளத்தை விற்பனை செய்கிறது. மகாராட்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூர் போர்வை, சீனா, வங்காளதேசம் மற்றும் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலை குறைந்த போர்வைகளாலும் பவானி ஜமக்காளத்தின் கிராக்கி குறைந்துவிட்டது.[12]

புவியியல் சார்ந்த குறியீடு[தொகு]

2005-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, பவானி ஜமக்காளத்தை புவியியல் சார்ந்த குறியீடாக அறிவிக்க விண்ணப்பித்தது.[13] அதனை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு 2005-06 ஆண்டுகளில் புவியியல் சார்ந்த குறியீடாக அங்கீகரித்தது.[3]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Parry, Breman, Kapadia. The worlds of Indian industrial labour. பக். 380. 
  2. 2.0 2.1 de Neve. The Everyday Politics of Labour. பக். 42. 
  3. 3.0 3.1 "Geographical indications of India". Government of India. Archived from the original on 26 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 de Neve. The Everyday Politics of Labour. பக். 43. 
  5. 5.0 5.1 5.2 5.3 de Neve. The Everyday Politics of Labour. பக். 87. 
  6. "When passion met fashion". The Hindu. 13 April 2014. http://www.thehindu.com/features/metroplus/events/when-fashion-met-passion/article5909543.ece. 
  7. de Neve. The Everyday Politics of Labour. பக். 167. 
  8. de Neve. The Everyday Politics of Labour. பக். 45. 
  9. de Neve. The Everyday Politics of Labour. பக். 44. 
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 de Neve. The Everyday Politics of Labour. பக். 86. 
  11. 11.0 11.1 Assayag, Fuller. Globalizing India: Perspectives from Below. பக். 93. 
  12. 12.0 12.1 12.2 "No takers for Erode blankets". Deccan Chronicle. 31 March 2013. http://www.deccanchronicle.com/140101/news-current-affairs/article/no-takers-erode-blankets. 
  13. "GI tag: TN trails Karnataka with 18 products". Times of India. 29 August 2013. http://timesofindia.indiatimes.com/city/chennai/GI-tag-TN-trails-Karnataka-with-18-products/articleshow/6458268.cms. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_ஜமக்காளம்&oldid=3860149" இலிருந்து மீள்விக்கப்பட்டது