தா. மோ. அன்பரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தா. மோ. அன்பரசன்
ஊரக தொழிற்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
முதல்வர்மு. க. ஸ்டாலின்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
பதவியில்
மே – 14 மே 2011
முதல்வர்மு. கருணாநிதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
12 மே 2006 – 14 மே 2011
தொகுதிஆலந்தூர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 21, 1960 (1960-04-21) (அகவை 63)[1]
குன்றத்தூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்தமிழ்ச்செல்வி
பிள்ளைகள்தமிழ்மாறன்
லாவண்யா
வாழிடம்(s)எண். 26, துலுக்க தெரு, குன்றத்தூர், சென்னை - 600 069.
வேலைஅரசியல்வாதி

தா. மோ. அன்பரசன் (T. M. Anbarasan) என்பவர் தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், தற்போதைய ஊரக தொழிற்துறை அமைச்சரும் ஆவார். இவர் குன்றத்தூரில் திசம்பர் 11, 1959 இல் பிறந்தவர். இவர் பல்கலைக்கழக முந்தைய படிப்பு வரை படித்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட்டு, அ.தி.மு.க வைச் சேர்ந்த பா. வளர்மதியை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[3] தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக ஊரக தொழிற்துறை (ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்) அமைச்சசராக பதவியேற்றார்.[5]இவர் தி.மு.கவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.[6] இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-16. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.
  2. "T. M. Anbarasan profile at TN government website". Archived from the original on 2008-07-03. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
  3. "Valarmathi defeated by DMK's Anbarasan in Alandur". Archived from the original on 2006-06-30. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
  4. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  5. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  6. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=80087[தொடர்பிழந்த இணைப்பு]
  7. . தினமணி. https://www.dinamani.com/all-sections/arasiyal_arangam/2011/mar/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-327350.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._மோ._அன்பரசன்&oldid=3557568" இலிருந்து மீள்விக்கப்பட்டது