கொனியேட்டி ரோசையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொனிஜெடி ரோசையா
Konijeti Rosaiah
13வது தமிழக ஆளுநர்
பதவியில்
31 ஆகஸ்டு 2011 – 30 ஆகஸ்டு 2016
முன்னையவர்சுர்சித் சிங் பர்னாலா
பின்னவர்சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு)
15வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
03 செப்டம்பர் 2009 – 24 நவம்பர் 2010
முன்னையவர்யெ.சா.ராசசேகர ரெட்டி
பின்னவர்கிரண் குமார் ரெட்டி
தொகுதிகுண்டூர்[1](சட்ட மேலவை உறுப்பினர்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூலை 1933 (1933-07-04) (அகவை 90)
வேமூரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா இந்தியா
இறப்பு4 திசம்பர் 2021(2021-12-04) (அகவை 88)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சிவலட்சுமி
பிள்ளைகள்கே எசு சுப்பாராவ், பி ரமாதேவி, கே எசு என் மூர்த்தி
வாழிடம்(s)அமீர்பேட், ஐதராபாத்

கொனிஜெடி ரோசையா (Konijeti Rosaiah, தெலுங்கு: కొణిజేటి రోశయ్య, 4 சூலை, 1933- 4 திசம்பர், 2021) ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[2][3] இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்கி முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.[4] இவரது பதவி விலகலை அடுத்து கிரண்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆகத்து 31, 2011 முதல் ஆகத்து 30, 2016 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.[5]

பதவிகள்[தொகு]

  • 1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை
  • 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.
  • 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.
  • 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.
  • 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
  • 1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
  • 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.
  • 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
  • 1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
  • 1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.
  • 1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
  • 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத்துறை அமைச்சர்.
  • 2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.
  • 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்.[6][7]

விருதுகள்[தொகு]

2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.[8]

மறைவு[தொகு]

உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 திசம்பர் 4 அன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2010-12-04.
  2. "Rosaiah takes oath as caretaker Andhra CM". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-09-03. Archived from the original on 2009-09-05. பார்க்கப்பட்ட நாள் 2009-09-03.
  3. "Rosaiah - A low profile leader". Archived from the original on 2009-09-06. பார்க்கப்பட்ட நாள் 2010-12-04.
  4. "rosaiah  : ap chief minister k rosaiah : Andhra Pradesh CM Rosaiah resigns : Rosaiah resigns as Andhra Pradesh Chief Minister". BindasLand. Archived from the original on 25 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 November 2010.
  5. தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தினமலர் நாளிதழ், பார்க்கப்பட்ட நாள்:ஆகத்து 26, 2011
  6. "டாக்டர். கே. ரோசைய்யா மேதகு ஆளுநர், தமிழ்நாடு". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2015.
  7. "Profile of His Excellency Dr. K. Rosaiah Governor of Tamil Nadu". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2015.
  8. "Rosaiah sworn in as Andhra CM". தி இந்து. 2009-09-03 இம் மூலத்தில் இருந்து 2009-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090905004542/http://beta.thehindu.com/news/national/article14639.ece. பார்த்த நாள்: 2009-09-03. 
  9. தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்...!. தினத்தந்தி நாளிதழ். 4 டிசம்பர் 2021. https://www.dailythanthi.com/News/India/2021/12/04092607/Former-TN-Governor-Rosaiah-Passed-away.vpf. 
அரசியல் பதவிகள்
முன்னர்
யானமல இராமகிருஷ்ணுடு
ஆந்திரப் பிரதேச நிதியமைச்சர்
2004–2010
பின்னர்
அனம் இராம நாராயண இரெட்டி
முன்னர்
ராஜசேகர ரெட்டி
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
2009–2010
பின்னர்
நல்லாரி கிரண் குமார் ரெட்டி
அரசு பதவிகள்
முன்னர்
சுர்சித் சிங் பர்னாலா
பின்னர்
சி. வித்தியாசாகர் ராவ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனியேட்டி_ரோசையா&oldid=3583124" இலிருந்து மீள்விக்கப்பட்டது