தோங்கிரி கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dongri Fort

தோங்கிரி கோட்டை அல்லது தோங்கிரி மலைக்கோட்டை(Dongri Fort or Dongri Hill Fort) என்பது இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். உள்ளூரில் இக்கோட்டை இர்மித்ரி கோட்டை என்று அழைக்கப்படுகிறது. தோங்கிரி பகுதியில் உள்ள இக்கோட்டை 1739 ஆம் ஆண்டில் மாராட்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது உள்ளூரில் இருந்தவர்களும் அங்கிருந்த தேவாலய நிர்வாகமும் இக்கோட்டை பராமரிப்பைக் கவனித்து வந்தன, சில பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொண்டன. ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில், பாத்திமா எங்கள் பெண்மணி என்ற விருந்து நிகழ்ச்சி இங்குக் கொண்டாடப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் தங்களுடைய தொழுகைக்காக அங்கு வந்து தொழுகின்றனர். இக்கோட்டையில் இருந்து 360 பாகை கோணத்தில் சுற்றுப்புறம் முழுவதையும் ஒருவரால் காணமுடியும். மேற்கில் அரபிக் கடல், வடக்கில் வசாய் கோட்டை, கிழக்கில் போரிவாலி தேசியப் பூங்கா மற்றும் தெற்கில் எசல் உலகம் மற்றும் தண்ணீர் உலகம் என்ற உல்லாசத் தண்ணீர்ப் பூங்கா ஆகியன இருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோங்கிரி_கோட்டை&oldid=3764793" இலிருந்து மீள்விக்கப்பட்டது