தகதர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகதர்த்தி
Dagadarthi
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
வட்டம் (தாலுகா)தகதர்த்தி
மொழிகள்
 • Officialதெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
நெல்லூர் மாவட்டம் தகதர்த்தியில் சாய் பாபா கோயில்

தகதர்த்தி (Dagadarthi) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும்.[1]

== புவியியல் அமைப்பு == 14° 42′ 28″ வடக்கு 79° 51′ 2″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தகதர்த்தி கிராமம் பரவியுள்ளது.

வருவாய் பதிவுகள்[தொகு]

சொத்துகள் வாங்குதல் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நெல்லூர் மாவட்டத்தின் காவலி வருவாய் வட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பதிவாளர் அலுவலகம் அல்லூர் கிராமத்தில் உள்ளது.

அரசியல்[தொகு]

காவலி சட்டப் பேரவைத் தொகுதியில் தகதர்த்தி இடம்பெற்றுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

விவசாயம் கிராம மக்களின் முக்கியமான முதல்நிலைத் தொழிலாக உள்ளது. மக்கள் தொகையில் 85 சதவீதத்தினர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதைத் தவிர்த்து இரண்டாம் நிலைத் தொழிலாக கணினி மென்பொருள் தொழில் இங்கு வளர்ந்து வருகிறது.

நீர்ப்பாசனம்[தொகு]

இம்மண்டலத்தின் விவசாய நிலங்கள் கனிகிரி நீர்த்தேக்கம் மூலமாக நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. சோமசீலா அணை மற்றும் நீர்த்தேக்கத்தில் இருந்து காவலி மற்றும் வடக்கு துரிமெரலா கால்வாய்கள் மூலமாக கனிகிரி நீர்த்தேக்கம் தண்ணீரைப் பெறுகிறது.

விமான நிலையம்[தொகு]

புதியதாக விமான நிலையம் கட்டுவதற்கு தகதர்த்தியில் சுமார் 2600 ஏக்கர் நிலப்பரப்பிலான இடம் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகதர்த்தி&oldid=2005625" இலிருந்து மீள்விக்கப்பட்டது