உடன்குடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] திருச்செந்தூர் வட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பதினேழு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடன்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை54,192 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,584 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 31 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அதியக்குறிச்சி
  2. செட்டியாபத்து
  3. குலசேகரன்பட்டினம்
  4. குதிரைமொழி
  5. லெட்சுமிபுரம்
  6. மணப்பாடு
  7. மாநாடு தண்டுபத்து
  8. மாதவன் குறிச்சி
  9. மெய்ஞானபுரம்
  10. நயினாபத்து
  11. நங்கைமொழி
  12. பரமன் குறிச்சி
  13. சீர்காட்சி
  14. செம்மறிக்குளம்
  15. சிறுநாடார் குடியிருப்பு
  16. வெள்ளன்விளை
  17. வெங்கடராமானுஜபுரம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Tutucorin District Panchayat Union
  3. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்