கணவிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணவிரி என்பது ஒரு மலரின் பெயர். [1] [2]

வையை ஆற்றில் வந்த மலர்களில் ஒன்று. [3]

யாப்பிலக்கணத்தில் பாடலின் அடிகளை இருவகைகளில் அலகிடுவர். தொல்காப்பியம் எழுத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அடிகளைக் குறிப்பிடும் முறைகளையும், [4] சீரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அடிகளின் பேரில் பாடலைக் குறிப்பிடும் முறையையும் [5] காட்டுகிறது.

யாப்பருங்கலம் என்னும் நூல் கணவிரி என்னும் மலர்பெயரை நாலெழுந்துச் சீருக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறது. [6]

பரிபாடல் பல்வகைப் பூக்களோடு இதனையும் ஒன்றிக் குறிப்பிடுகிறது. [7]

மணிமேகலை என்னும் நூல் கணவிரி என்னும் பூவால் கட்டிய மாலையைக் குறிப்பிடுகிறது. [8]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகிய செய்யுள் வாய்பாட்டு மலர்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வோம்.
  2. தேமா, புளிமா, பூவிரி, கணவிரி எனச் செய்யுளில் சீருக்கு வாய்பாடு காட்டுவாரும் உண்டு.
  3. பரிபாடல் 11-20
  4. தொல்காப்பியம் செய்யுளியல் 35 முதல் 39
  5. தொல்காப்பியம் செய்யுளியல் 43 முதல் 45
  6. விளக்கம்
  7. சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள், 20
    தாய தோன்றி தீயென மலரா, - பரிபாடல் 11 அடி 20-21
  8. கணவிரி மாலை கைக்கொண் டென்ன
    நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி - மணிமேகலை 5-அடி 48-49
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவிரி&oldid=2403468" இலிருந்து மீள்விக்கப்பட்டது