பஸ்ஸாஸ் டி பெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஸ்ஸாஸ் டி பெட்ரோ
மீன்பிடி கரை
பஸ்ஸாஸ் டி பெட்ரோ is located in இந்தியா
பஸ்ஸாஸ் டி பெட்ரோ
பஸ்ஸாஸ் டி பெட்ரோ (இந்தியா)
நாடுஇந்தியா
Stateஇலட்சத்தீவுகள்
உப தீவுஅமினிதிவி
பரப்பளவு
 • மொத்தம்2,474.33 km2 (955.34 sq mi)
Languages
 • Officialமலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

பஸ்ஸாஸ் டி பெட்ரோ (Bassas de Pedro) என்பது நீரில் மூழ்கிய கரைத்தட்டு அல்லது நீரில் மூழ்கிய பவளத் தீவு ஆகும். இது முன்யால் பார், படுவா கரைத்தட்டு ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[1]

புவியியல்[தொகு]

இலட்சத்தீவுகளின் முதலாவது மிகப்பெரிய பவளத்தீவு இதுவேயாகும். இதன் கடற்காயல் பரப்பளவு 2474.33 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இலட்சத்தீவுகளின் மொத்தப் பரப்பளவில் 59 வீதமான பரப்பளவு இக்கரைத்தட்டிற்கே சொந்தமானதாகும். இக்கரைத்தட்டானது 12°31'வ இலிருந்து 13°41'வ வரை 130 கிலோமீற்றர்கள் வரை பரந்துள்ளது. தீவுகளோ, சிறு தீவு மேற்பரப்புக்களோ இங்கு காணப்படவில்லை. இக்கரைத்தட்டின் ஆழம் 46 தொடக்கம் 50 மீற்றர்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்ஸாஸ்_டி_பெட்ரோ&oldid=2403982" இலிருந்து மீள்விக்கப்பட்டது