மண்டபம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இராமநாதபுரம் வட்டத்தில் அமைந்த மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 28 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்டபத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,42,352 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,650 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 34 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்: [3]

பனைக்குளம் • வெள்ளரி ஓடை • வேதாளை • வாலாந்தரவை • தேர்போகி • தங்கச்சிமடம் • செம்படையார்குளம் • சாத்தக்கோன்வலசை • இரட்டையூரணி • புதுவலசை • புதுமடம் • பிரப்பன்வலசை • பெருங்குளம் • பட்டிணம்காத்தான் • பாம்பன் • நொச்சியூரணி • மரைக்காயர்பட்டிணம் • மானாங்குடி • குசவன்குடி • கும்பரம் • கோரவள்ளி • கீழநாகாச்சி • காரான் • இருமேனி • என்மணங்கொண்டான் • ஆற்றாங்கரை • அழகன்குளம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Ramnad District Panchayat Unions
  3. மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்