கில்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கில்லா
அரபு மொழி: الحلة
நகரம்
நாடு ஈராக்
மாகாணம்பபிலோன்
மக்கள்தொகை (2011 Est)[1]
 • மொத்தம்6,50,000

கில்லா அல்லது அல் கில்லா (Hillah, அரபு மொழி: الحلة‎), also spelled Hilla or Al Hillah (BGN: Al Ḩillah) என்பது மத்திய ஈராக்கில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.பபிலோன் மாகாணத்தின் தலைநகரமான கில்லா நகரம் புறாத்து ஆற்றின் கில்லா கிளையில் அமைந்துள்ளது. இது பகுதாதுவிற்கு 100 km (62 mi) தொலைவில் தெற்காக அமைந்துள்ளது. 1998இன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 364,700 ஆகும். இது பாபேல் எனும் பண்டைய நகரத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. கில்லா நகரம் போர்சிப்பா மற்றும் கிஷ் ஆகிய பண்டைய நகரங்களுக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. இது முக்கியமான கில்லா கால்வாய் மூலம் நன்றாக நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில் அமைந்துள்ள ஒரு விவசாயப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு பயிர்கள், பழங்கள் மற்றும் ஜவுளி போன்ற பொருட்கள் பெருந்தொகையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கில்லா நகரத்தின் பெயர் "அழகு" என்ற அராபிய மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். புறாத்து ஆறு சரியாக நகரத்தின் நடுப்பகுதி ஊடாகச் செல்கிறது. நல்ல காலநிலை மற்றும் தூசு மற்றும் பாலைவனக் காற்று போன்றவற்றின் குறைவின் காரணமாக இந்த ஆற்றைச் சுற்றிப் பல்வேறு பேரீச்சை மற்றும் பல்வேறு மரக்கறி வகைகளும் பயிரிடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IRAQ". Thomas Brinkhoff: City Population. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லா&oldid=2800272" இலிருந்து மீள்விக்கப்பட்டது