இரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை
இரத்தினபுரி, இலங்கை
இரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை is located in இலங்கை
இரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை
இரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை
ஆள்கூறுகள் 6°41′27″N 80°22′46″E / 6.690866°N 80.379547°E / 6.690866; 80.379547
வகை Defence கோட்டை
இடத் தகவல்
நிலைமை அழிக்கப்பட்டது[1]
இட வரலாறு
கட்டிய காலம் 1618–1620
கட்டியவர் போர்த்துக்கேயர்

இரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை (Ratnapura Portuguese fort) என்பது இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.[2]

சீதாவாக்கை மன்னன் முதலாம் இராஜசிங்கனிடம் தோல்வி அடைந்த பின்னர், 1618 ஆம் ஆண்டுக்கும் 1620 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சமன் தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் இக்கோட்டையையும் தேவாலயம் ஒன்றையும் போர்த்துக்கேயர் அமைத்தனர். பின்னர் இக்கோட்டை கண்டியின் நாயக்க வம்ச மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனால்[3] கைப்பற்றப்பட்டு தேவாலயத்துடன் சேர்த்து இடிக்கப்பட்டு மகா சமன் தேவாலயம் எனும் பௌத்த ஆலயம் கோட்டை அமைந்திருந்த இடத்திலேயே அமைக்கப்பட்டது. தற்போது இங்குள்ள ஆலயத்தில் நிலப்பகுதியும் போர்த்துக்கேயத் தளபதியான சிமாவோ பினாவோ குதிரையில் அமர்ந்த படியும் வாளொன்றை ஓர் கையில் ஏந்தியபடியும் சிங்களப்படை வீரன் ஒருவனை காலால் மிதித்தபடியும் இருக்கும் ஒரு கற்செதுக்கல் காணப்படுகின்றது.[4]

தற்போது இங்கு 1864 ஆம் ஆண்டு சனவரி 1 இல் கட்டப்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றும், பொது நூலகம் ஒன்றும் முன்னாள் கச்சேரியும் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Colonial Forts – relics of old time warfare". Ceylon Today. 6 September 2013 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923224304/http://www.ceylontoday.lk/64-34505-news-detail-colonial-forts-relics-of-old-time-warfare.html. பார்த்த நாள்: 17 November 2014. 
  2. "Ratnapura". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
  3. "Ratnapura Portuguese Fort". AmazingLanka.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
  4. "Maha Saman Devala, Kuruvita Korale, Devalegama". Living Heritage Trust. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.

இவற்றையும் பார்க்க[தொகு]