பி. வி. சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் (இறப்பு: 29 மார்ச் 2007) இந்தியாவைச் சேர்ந்த இசை, நடன விமர்சகர் ஆவார். த ஸ்டேட்ஸ்மேன் எனும் ஆங்கிலப் பத்திரிகையில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களை ஏறத்தாழ 60 ஆண்டுகள் எழுதியவர். தமிழ்ப் பத்திரிகைகளிலும் இசை விமர்சனங்கள் எழுதினார்[1].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வாழ்வின் ஆரம்பத்தில் பர்மாவில் நாடக நிறுவனங்களில் இசையமைப்பாளராக பணியாற்றினார். ஆர்மோனியமும், கீபோர்டும் வாசிப்பதில் இவர் திறன் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போரின் காரணமான இவரின் குடும்பம் இந்தியாவிற்கு திரும்பியது. புது தில்லியில் நடுவண் அரசின் பொருளாதாரத் துறை அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார்.

இசைப் பணி[தொகு]

கருநாடக இசையை ஆர்மோனியத்தில் திறமையாக வாசிக்கும் திறன் படைத்த இவர், புகழ்பெற்ற பாடகர்களுடனும் நடனக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் யாமினி கிருஷ்ணமூர்த்தி (பரதநாட்டியம், குச்சிப்புடி நடனக் கலைஞர்) ஆவார்.

இவர் குறித்து வெளியான நூல்கள்[தொகு]

  • BEYOND DESTINY - The Life and Times of Subbudu; எழுதியவர்: லட குருடேன் சிங்; வெளியீட்டாளர்: பாரதிய வித்யா பவன், மும்பை[2][3].

மறைவு[தொகு]

வாழ்வின் கடைசி ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டிருந்த சுப்புடு, 29 மார்ச் 2007 அன்று புது தில்லியில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._சுப்ரமணியம்&oldid=3507593" இலிருந்து மீள்விக்கப்பட்டது