சாகீர் உசேன் ரோசாத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசாத் தோட்டம்

சாகீர் உசேன் ரோசாத் தோட்டம் (Zakir Hussain Rose Garden) என்பது இந்தியாவின் சண்டிகார் மாநிலத்தில் முப்பது ஏக்கர் பரப்பளவில் (1,20,000 மீ 2)[1] அமைந்துள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் சாகீர் உசேனின் பெயரிடப்பட்டுள்ள இப்பூங்காவில் 1600 வகையான[2] 50,000 ரோசாச் செடிகள் உள்ளன. சண்டிகார் மாநிலத்தின் முதன்மை ஆணையர் டாக்டர் மொகிந்தர் சிங் ரந்தவா அவர்களின் வழிகாட்டுதலுடன் 1967 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இப்பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா என்ற பெயரைப் பெற்றது.[2]. இப்பூங்காவில் ரோசாக்கள் மட்டுமின்றி மருத்துவக் குணமிக்க மரங்களும் காணப்படுகின்றன. வில்வம், கற்பூரம், கடுக்காய், தான்றி மற்றும் செம்மயிற்கொன்றை போன்ற மரங்கள் அவற்றில் சிலவாகும். இங்குள்ள ரோசாச் செடிகள் செதுக்கப்பட்ட புல்வெளிகள் மற்றும் மலர்ப் படுக்கைகளில் நடவு செய்யப்பட்டுள்ளன.

2006 ரோசாத் திருவிழாவில் பரிசு பெற்ற ரோசாப்பூ

பிற நிகழ்ச்சிகள் நடத்துவதற்குரிய ஒரு இடமாக இருப்பதைத் தவிர, சாகீர் ரோசா தோட்டம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வருடாந்திர ரோசா திருவிழா நடைபெறும் இடமாகவும் இருக்கிறது. இத்திருவிழா சண்டிகரின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. முக்கியமாக ரோசாப் பூவின் சிறப்புக்கு புகழ் சேர்ப்பதற்காக இத்திருவிழா நடத்தப்படுகிறது. உணவு, பானங்கள், மகிழ்ச்சி சவாரிகள் மற்றும் பல்வேறு இயற்கைப் போட்டிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். புகைப்படக்கலை, தோட்டம் அமைத்தல், நில அழகு அமைத்தல், பொன்சாய் எனப்படும் தட்டத் தோட்டம், ரோசா இளவரசி மற்றும் ரோசா இளவரசன் போன்ற பலவகையான போட்டிகள் இயற்கைப் போட்டிகளில் உள்ளடங்கும். சுற்றுப்புறத்தில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். [3][4]

படவரிசை[தொகு]

2016 மார்ச்

உரோசா திருவிழா - 2017 பெப்ரவரி

.

மேற்கோள்கள்[தொகு]

  1. "City of Gardens". Chandigarh City. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  2. 2.0 2.1 "2014 Directory" (PDF). World Federation of Rose Societies. p. 194. Archived from the original (PDF) on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  3. "Rose Garden". Chandigarh Tourism. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  4. "Rose Festival" (PDF). Chandigarh Tourism. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.

புற இணைப்புகள்[தொகு]