நிலைகொள் வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோட்டமும் விலங்குகளும் பயன்பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.

நிலைகொள் பண்ணைமுறை அல்லது நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்பது சூழலியல் கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த வேளாண்மை முறை ஆகும். இது நிலைப்பேறான மாந்தக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் அமைப்புச் சூழல்சார் வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.[1][2]

நிலைகொள் வேளாண்மை என்பது அமைப்பியல் சிந்தனை, ஒப்புருவாக்கம், இயற்கைச் சூழல் அமைப்புகளில் அமைந்த பாணிகளையும் மீள்தகவு கூறுபாடுகளையும் மையப்படுத்திய வடிவமைப்பு நெறிமுறைகள் ஆகும். இது இந்த நெறிமுறைகளை வளரும் துறைகளாகிய மீளாக்க வேளாண்மையிலில் இருந்து மீள்காட்டுயிராக்கம், குமுகாய மீள்தகவு போன்ற பல்வேறு புலங்களில் பயன்படுத்துகிறது. நிலைகொள் வேளாண்மைக்கான ஆங்கிலச் சொல்லை டேவிடு கோல்ம்கிரென் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் உயர்கல்வி மேம்பாட்டுக்கான தாசுமேனியக் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறையில் முதுபட்டப் படிப்பு மாணவராக இருந்தார். பிறகு 1978 இல் தாசுமானியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் உளவியலில் பில்மோலிசன் கட்டில் முதுநிலை விரிவுரையாளரானார்.[3] It originally meant "permanent agriculture",[4][5] மசனோபு புகுவோகாவின் இயற்கை வேளாண்மை மெய்யியலின்படி, எந்தவொரமுண்மையான பேண்தகு அமைப்பும் சமூகக் கூறுபடுகளையும் உள்ளடக்குதல் வேண்டும் என்பதைக் கருதி, பிறகு இச்சொல்லை அவர் நிலைகொள் வளர்ப்புக்கும் விரிவாக்கினார். இதில் சூழல் வடிவமைப்பு, சூழற் பொறியியல், மீளாக்க வடிவமைப்பு, சுற்றுச்சூழல் வடிவமைப்பு, கட்டுமானம் எனப் பல கிளைப்பிரிவுகள் உள்ளன. இது ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை யையும் உள்ளடக்கும். பின்னர் கூறிய துறை பேண்தகு கட்டமைப்பு, மீளாக்கமும் தற்பேணலும் வாய்ந்த வாழிடம், இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பேணும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றை வடிவமைக்க வழிவகுக்கிறது.[6][7]

மோலிசன் கூறுகிறார்: " நிலைகொள் வேளாண்மை என்பது இயற்கையோடு இயைந்த முறைமையே தவிர அதற்கு எதிரானதல்ல; இது தொடர்ந்த நோக்கீட்டால் உருவாகியதே தவிர சிந்தனையற்ற தொடருழைப்பால் உருவாகியதல்ல; தாவரங்களயும் விலங்குகளையும் அவற்றின் செயல்பாட்டுச் சூழ்நிலியில் தொடர்ந்து உற்றுநோக்கியதால் உருவாகியதே தவிர எந்தவொரு பகுதியையும் ஒற்றை விளைபொருள் அமைப்பாக கருதியதால் உருவாகியதல்ல."[8]

பரவலாக மேற்கோள் காட்டப்படும் நிலைகொள் வேளாண்மையின் 12 நெறிமுறைகள் முதலில் டேவிடு கோல்ம்கிரென் . Permaculture: Principles and Pathways Beyond Sustainability(2002) என்ற தனது நூலில் விவரிக்கப்பட்டவையாகும். இவற்றில் பின்வருவன அடங்கும்: Observe and Interact, Catch and Store Energy, Obtain a Yield, Apply Self Regulation and Accept Feedback, Use and Value Renewable Resources and Services, Produce No Waste, Design From Patterns to Details, Integrate Rather Than Segregate, Use Small and Slow Solutions, Use and Value Diversity, Use Edges and Value the Marginal, and Creatively Use and Respond to Change.

வரலாறு[தொகு]

நிலைகொள் வேளாண்மைப் புலத்தை பல வேளாண் அறிஞர்கள் புரட்சிகரமாக மாற்றினர். 1911இல், பிராங்கிளின் இராம் கிங் தனது (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை என்ற சொல்லை முதன்முதலில் எடுத்தாண்டார். 1929இல், யோசப்பு இரசல் சிமித் தனது (Tree Crops: A Permanent Agriculture) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை யை ஒரு துணைத் தலைப்பாகப் பயன்படுத்தினார். இவர் இந்நூலில் மாந்த உணவாக பழங்களும் கொட்டைகளும் பற்றித் தான் செய்த செய்முறைகளின் நெடுநாள் பட்டறிவைத் தொகுத்து அளித்துள்ளார். .[9] Smith saw the world as an inter-related whole and suggested mixed systems of trees and crops underneath. This book inspired many individuals intent on making agriculture more sustainable, such as Toyohiko Kagawa who pioneered forest farming in Japan in the 1930s.[10]

நிலைகொள் வேளாண்மை வரையறையை வலுப்படுத்தக்கூடியதாக ஆத்திரேலியரான பி. ஏ. யியோமான் தனது (Water for Every Farm (1964)) என்ற நூலில் நிலைகொள் வேளாண்மை பற்றியும் அதன் தொடர்ந்து நிலவக்கூடிய இயல்பு பற்றியும் கூறியுள்ளார். இவர் 1940களில் ஆத்திரேலியாவில் நோக்கீட்டை (அவதானத்தை) அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர். இவர் 1950 களில் நீர் வழங்கல், பகிர்தல் சார்ந்த மேலாண்மைக்கான முதன்மையான வடிமைப்பு முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கோல்கிரென் சுட்டீவர்ட்டு பிராண்டு பணிகளே நிலைகொள் வேளாண்மையின்பால் தொடக்கநிலைத் தாக்கம் செலுத்தின எனக் கூறுகிறார்.[11] பிற முதனிலைத் தாக்கங்களாக, ரூத் சுட்டவுட், எசுத்தர் தீன்சு, மசனோபு புகுவோகா ஆகியவர்களின் பணிகளைக் கூறலாம். எசுத்தர் தீன்சு குழிதோண்டா நடவுமுறையை அறிமுகப்படுத்தினார். மசனோபு புகுவோகா 1930 களில் யப்பானில் உழவுசெய்யாத பழத்தோட்டங்களையும் தோட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இவை இயற்கை வேளாண்மைக்கு வித்திட்டன.[12]

பெயர்க்காரணம்[தொகு]

1978ஆம் ஆண்டு, ஆத்திரேலிய சூழலியலாளர்களான பில் மோலிசனும் அவரது மாணவரான டேவிட் கொல்ம்கிரனும் நிலைகொள் வேளாண்மை என்ற பொருள் தரும் ஆங்கிலச் சொல் ஒன்றின் (PERMAnant AgriCULTURE) சுருக்கமாக நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்னும் சொல்லை உருவாக்கினர். தமிழில் நிலையான வேளாண்மை, நிரந்தர வேளாண்மை, நிலைகொள் வேளாண்மை ஆகிய சொற்கள் இதற்குப் பயன்படக் கூடியவை.

வரையறைகள்[தொகு]

  • நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தினை முன்மொழிந்த பில் மோலிசன், நிலைகொள் வேளாண்மை என்பது நிலைப்பேறான மானிடச் சுற்றாடல்களை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் தொகுதி" என்பார். இதன்படி எரிபொருளுக்குப் பதிலாக உயிரியல் வளத்தைப் பயன்படுத்துவதும், வேலையாள் வினைத்திறனை உடைய, சிறிய, செறிந்த முறைத் தொகுதிகளுக்கான வடிவமைப்புகளை நிலைகொள் வேளாண்மை விவரிக்கிறது.
  • மைக்க்கேல் பிளாக்சியின் விவரிப்பின்படி நிலைகொள் வேளாண்மை என்பது "நிலைப்பேறுடையதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்புள்ளதுமான நிலப்பயன்பாட்டு முறைமைகளுக்கான வடிவமைப்பாகும்." இது சமூக நிலைபேற்றுக்கு உதவக்கூடிய பண்பாட்டு நோக்கில் பொருத்தப்பாடுடைய முறைமைகள், நிலப்பயன்பாட்டியல், சூழலியற் கொள்கைகளை ஆகிய்வற்றை ஒருங்கிணைத்ததாய் அமையும்.

நிலைகொள் வேளாண்மையின் விழுமியங்கள்[தொகு]

நிலைகொள் வேளாண்மை ஏனைய மாற்றுப் பண்ணை முறைகளான இயற்கை வேளாண்மை, நிலைப்பேறான வேளாண்மை, சூழல் வேளாண்மை ஆகியவற்றிலிருந்து தனித்துவமானது. இது தனித்தனிக் கொள்கைகளுக்குப் பதிலாக முழுப் பூகோள சமுதாயத்தினதும் வாழ்விருப்பு பற்றி கருதுகிறது.

  • புவியைப் பராமரித்தல்: அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான மூலம் புவி என்பதை ஒப்புதல். புவியின் பல்தன்மை கொண்ட நலனோம்புகையை (நீர், காற்று, உணவு, வாழிடம்) உணருதல். அதனைக் கேடுகளிலிருந்து பேணுதல். பயனுறுதி மிக்கதாகப் பேணுதல்.
  • மக்களைப் பராமரித்தல்: சமூகப் பொறுப்புணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தல், வாழ்விருப்புக்கான வளங்களை அடைதல், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதால் புவிக்கோளம் ஊறுபடுவதைத் தவிர்த்தல்.
  • மக்கள்தொகைக்கும் நுகர்வுக்குமான எல்லைகளை வகுத்தல்: குறையக்கூடிய வளங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப பயன்படுதைத் திட்டமிடல். இதற்காக மக்களையும் நிலத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான நேரம், வேலையாள், ஆற்றல், நிதி, தகவல் முதலியவற்றை ஒருங்கிணைப்பது.

நிலைகொள் வேளாண்மையின் இயல்புகள்[தொகு]

  • நிலைகொள் வேளாண்மை, முழுமை பெற்ற ஒருங்கிணைந்த முறைமைகளின் பகுப்பாய்வும் வடிவ முறையியலும் ஆகும்.
  • உற்பத்தித் திறனுள்ள சூழல் தொகுதியை உருவாக்குவதிலும் பாழடைந்த சூழல் தொகுதியை மனித நிலைத்திருப்புக்கு மீளுருவாக்குவதிலும் நிலைகொள் வேளாண்மை பயன்படும்.
  • மரபுவழி அறிவு, பட்டறிவை மதிப்பிடவும் வலுவூட்டவும் நிலைகொள் வேளாண்மை பயன்படுகிறது. உலகளாவிய பேண்தகு வேளாண்மை முறைகளையும் நில மேலாண்மை நுட்பங்களையும் நிலைகொள் வேளாண்மை உள்ளடக்குகின்றது.
  • வேதியியல் மாசாக்கத்தை ஏற்படுத்தும் பூச்சி மருந்துகளின் பயன்பாடற்ற இயற்கை வேளாண் முறையை நிலைகொள் வேளாண்மை மேம்படுத்துகின்றது.
  • நிலைகொள் வேளாண்மை, சூழல் கூறுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மை முதலான அங்கித் தொடர்புகளை கூட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டது.

நிலைகொள் வேளாண்மை வடிவமைப்பின் கோட்பாடுகள்[தொகு]

சூழலியல், ஆற்றல் சேமிப்பு, நிலக்காட்சிமை வடிவமைப்பு, சுற்றாடல் அறிவியல் எனப் பல்துறை சார்ந்ததாக இது வடிவமைக்கப்படுகிறது.

  1. தொடர்பு இடவமைவு.
  2. பன்மையான செயற்பாடுகளைக் கொண்ட கூறுகளின் உள்ளடக்கம்.
  3. ஆற்றல் செயல் திறன் மிக்க திட்டமிடல்.
  4. உயிரியல் மூலவளங்களின் பயன்பாடு.
  5. ஆற்றல் சுழற்சி.
  6. இயற்கைத் தாவர நிலைப்பேறும் மீள்சுழற்சியும்.
  7. இனப்பல்வகைமையும் பல்லின வளர்ப்பும்.
  8. இயற்கை வடிவங்களைக் குழப்பாமல் திட்டமிடல்.
  9. மன நிலை மாற்றத்தைத் திட்டமிடல்.

நிலைகொள்வேளாண்மையின் கோட்பாடுகள்[தொகு]

நிலத்தை தொடர்ந்து கவனித்து அதனுடனான தொடர்புகளைப் பேணுதல்[தொகு]

இயற்கைக்கு எதிரான செயல்களை செய்வதை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்து அதைத் தொடர்ந்து கவனித்தல் எ.கா: பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்துதல்.

இயற்கையின் ஒவ்வொரு ஆற்றலையும சேமித்தல்[தொகு]

சூரிய வெளிச்சம், மழை, காற்று முதலான இயற்கை வளங்களை தக்க முறையில் பயன்படுத்தலும் பாதுகாத்தலும்.

மகசூலை முழுமையாகப் பயன்படுத்துதல்[தொகு]

முதன்மை விளைபொருள் தவிர்ந்த ஏனைய பக்க விளைபொருள்களையும் முடிந்தவரைபயன்படுத்துதல். எ.கா: அறுவடையின் பின்னான வைக்கோல்.

புதுப்பிக்கத்தக்க வளங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல்[தொகு]

மண்ணின் வளத்தை அழிவடையாமல் பாதுகாத்தல்.

வளங்கள் வீணாவதைத் தடுத்தல்[தொகு]

இயற்கை வளங்களை மதித்து அதனைப் பேணுதல்.

வடிவமைப்பும் வலயங்களும்[தொகு]

மானிடச் சூழலியலில் தொகுதியின் பயன்படி தன்மை மற்றும் தாவர விலங்கினத் தேவைகள் என்பவற்றின் அடிப்படையிலும் நிலைகொள் வேளாண்மைத் தொகுதி பல வலயங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படும். தாவர விலங்குத் தொகுதிகளைப் பராமரிப்பதற்கான தேவையும் வலயங்களைத் தீர்மானிக்கும். இதன்படி கூடிய அல்லது செறிந்த பராமரிப்பு தேவையான பயிர்த் தொகுதி முதலாம் இரண்டாம் வலயங்களில் பெரிதும் இடம்பெறும். இதன் அடிப்படையில் 0 தொடக்கம் 5 வரையான வலயங்கள் வடிவமைக்கப்படும்.

வலயம் 0[தொகு]

இது வீடு அல்லது பண்ணை அலுவலகம் ஆகும். சூழலைப் பெரிதும் மாசாக்கம் செய்யாததும் சூழலை சமநிலை குலையாமல் பேணுவதுமான நடவடிக்கைகளைக் கொண்டதாக இருப்பதால் இது நிலைகொள் வேளாண்மை அணுகுமுறைக்குள் அடங்கும். இயற்கை சூரிய ஒளியைப் பயன்படுத்துதல், குறைந்த சக்தி மற்றும் நீர்ப் பயன்பாடு என்பன காணப்படும்.

வலயம் 1[தொகு]

இடு பண்ணை வீட்டுக்கு அடுத்து காணப்படக்கூடிய வலயம். இங்கு பைங்குடில் அமைப்பு, மூலிகைத் தாவரங்கள், சலாது வகைகள், கொடிகள் கொண்ட மரக்கறி வகைகள், சிறு பழத் தாவரங்கள் என்பன காணப்படும்.

வலயம் 2[தொகு]

இவ்வலயத்தில் பராமரிப்பு செறிவு குறைந்த பல்லாண்டுத் தாவரங்கள் பயிரிடப்படும். இவற்றுக்கு தினமும் நீரிட்டு பராமரிப்பதோ அல்லது அடிக்கடி களை கட்டும் தேவையோ இருக்காது. இவ்வலயம் தேனீ வளர்ப்புக்குரிய தேன்கூடு மற்றும் சேதனப் பசளை தயாரிக்கும் குழிகள் முதலானவற்றையும் கொண்டிருக்கும்.

வலயம் 3[தொகு]

இவ்வலயத்தில் முதன்மையான பயிரிடல் மேற்கொள்ளப்படும். பத்திரக்கலவை இடல் முதலான அணுகுமுறைகளால் நீர் வழங்கல் களைகட்டல் என்பன குறைக்கப்பட்டிருக்கும்.

வலயம் 4[தொகு]

இது ஓரளவு காடு சார்ந்ததாக இருக்கும். நேரடியாக விறகு மற்றும் உணவுப் பொருட்கள் இங்கிருந்து சேகரிக்கப்படும்.

வலயம் 5[தொகு]

இது மனிதத் தலையீடு இல்லாத காடாகக் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hemenway, Toby (2009). Gaia's Garden: A Guide to Home-Scale Permaculture. Chelsea Green Publishing. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781603580298. http://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5#v=onepage. 
  2. Mars, Ross (2005). The Basics of Permaculture Design. Chelsea Green Publishing. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781856230230. http://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1. 
  3. Holmgren and Mollison (1978). Permaculture One. Transworld Publishers. பக். 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0552980753. 
  4. King 1911.
  5. Paull , John (2011) The making of an agricultural classic: Farmers of Forty Centuries or Permanent Agriculture in China, Korea and Japan, 1911–2011, Agricultural Sciences, 2 (3), pp. 175–180.
  6. Hemenway 2009, ப. 5.
  7. Mars, Ross (2005). The Basics of Permaculture Design. Chelsea Green. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85623-023-0. https://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1. 
  8. Mollison, B. (1991). Introduction to permaculture. Tasmania, Australia: Tagari.
  9. Smith, Joseph Russell; Smith, John (1987). Tree Crops: A permanent agriculture. Island Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59726873-8. https://books.google.com/books?id=0PQvqpVnFbAC&lpg=PP1. 
  10. Hart 1996, ப. 41.
  11. Holmgren, David (2006). "The Essence of Permaculture". Holmgren Design Services. Archived from the original on 26 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டெம்பர் 2011.
  12. Mollison, Bill (15–21 September 1978). "The One-Straw Revolution by Masanobu Fukuoka". Nation Review: p. 18. 

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைகொள்_வேளாண்மை&oldid=3411625" இலிருந்து மீள்விக்கப்பட்டது