பெயாட்டே ஷெய்ப்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெயாட்டே ஷெய்ப்பே
Beate Zschäpe Edit on Wikidata
பிறப்பு2 சனவரி 1975 (அகவை 49)
ஜேனா

பெயாட்டே ஷெய்ப்பே (Beate Zschäpe ஜனவரி 2, 1975 புனைபெயர்கள்: சுசான் டீனெல்ற், மண்டி போல், பெய்ர்பெல் புசிலோவ்ஸ்கி[1]) ஒரு செருமானிய வலதுசாரித் தீவிரவாதி ஆவார். இவர் தேசிய சோசலிச திரைமறைவு அமைப்பின் உறுப்பினராக நம்பப்படுபவர்.

குடும்பமும் வாழ்க்கையும்[தொகு]

பெயாட்டே ஷெய்ப்பேயின் தாயார் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர். தந்தையார் உருமேனியர். தாயாரும் தந்தையாரும் உருமேனியாவில், புக்காரெஸ்ற் நகரில், ஒரே வகுப்பில் பல் வைத்தியம் கற்றவர்கள். பெயாட்டே ஷெய்ப்பே தனது தந்தையை ஒரு போதும் சந்தித்ததில்லை. இவரது தந்தை 2000இல் இறக்கும் வரை இவரைத் தனது மகள் என ஏற்றுக் கொள்ளவில்லை.[2] இவர் அடிக்கடி தனது அம்மம்மாவின் பொறுப்பிலேயே வாழ்ந்தவர். இவரது தாயார் இருதடவைகள் விவாகரத்துச் செய்து கொண்டவர். ஒவ்வொரு முறையும் தாயாரின் புதிய நட்பின் பெயரை தனது குடும்பப் பெயராகப் பெற்றுக் கொண்டவர். 15வது வயதுக்குள் தான் வாழ்ந்த நகரான யேனாவிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலுமாக 6 தடவைகள் வீடு மாற வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானவர்.[3]

கல்வியும் தொழிலும்[தொகு]

1982-1983இல் பெயாட்டேயின் இரண்டாவது வகுப்புப் பாடசாலை அறிக்கையின் படி இவர் நல்ல புள்ளிகளைப் பெறுவதற்கான பிரயத்தனங்களைச் செய்திருக்கிறார். ஆனாலும் இவரது கவனக்குறைவு, ஒழுங்கின்மை போன்ற காரணங்களால் இவரால் ஒரு திறமையான மாணவியாகத் திகழ முடியவில்லை. இவர் 1991 இல் தனது 15/16வது வயதில் யேனா நகரில் "யோகான் வோல்ப் காங்க் பொன் கொய்தே" பாடசாலையில் தனது பத்தாம் வகுப்பைப் படித்து முடித்த பின்னர், வேலை இல்லாதவர்களுக்கான வேலைஉருவாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு வர்ணம் தீட்டுபவரின் உதவியாளராகப் பணி புரியத் தொடங்கினார். அதன் பின் 1992 இலிருந்து 1996 வரை தோட்டத்தொழிற் பயிற்சியைத் தொழிற்கல்வியாகக் கற்று காய்கறி வளர்ப்பில் நிபுணர் ஆனார்.[4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Die Nazi Braut – Das Geheimnis der Beate Zschäpe ZDF தொலைக்காட்சி, செருமனி, நவம்பர் 7, 2015
  2. Beate Zschäpe - die Mutter der Terrorzelle
  3. Schleifen und ätzen | FOCUS Magazin | Nr. 4 (2012)
  4. Wer ist Beate Zschäpe wirklich? Uneheliches Kind als Druckmittel? www.hajofunke.wordpress.com|Lutz Bucklitsch|17.06.2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயாட்டே_ஷெய்ப்பே&oldid=2734354" இலிருந்து மீள்விக்கப்பட்டது