காசிம்புதுப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீரமங்கலம்-காசிம்புதுப்பேட்டை

மாநிலம் = தமிழ்நாடு

அமைவிடம்
நாடு  இந்தியா
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் ஆலங்குடி
பேரூராட்சித்தலைவர் துரை.தனலெட்சுமி
மக்களவைத் தொகுதி கீரமங்கலம்-காசிம்புதுப்பேட்டை

மாநிலம் = தமிழ்நாடு

மக்கள் தொகை

அடர்த்தி

9,360 (2011)

110/km2 (285/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


காசிம்புதுப்பேட்டை , புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். கீரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 808. இதில் ஆண்கள் 410, பெண்கள் 398 பேர். இக்கிராமத்தில் இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[1] [2][3]

தெருக்கள்[தொகு]

காசிம்புதுப்பேட்டை
காசிம்புதுப்பேட்டை கிளை அஞ்சலகம்

காசிம்புதுப்பேட்டை கிராமத்தில் மொத்தம் ஐந்து தெருக்கள் உள்ளன.

1.பள்ளிவாசல் தெரு 2.கட்டபொம்மன் தெரு

3.முஸ்லிம் தெரு

4.கித்துவாய் தெரு

5.அருணாச்சல தேவர் தெரு

பள்ளிவாசல்[தொகு]

காசிம்புதுப்பேட்டையில் இசுலாமிய மக்கள் தொழுகை செய்வதற்காக இவ்வூரின் ஜமா-அத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது.

காசிம்புதுப்பேட்டை பள்ளிவாசல்

.

அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள்[தொகு]

காசிம்புதுப்பேட்டையில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், ஒரு அங்கன்வாடி மையமும், ஒரு கிளை அஞ்சலகமும், ஒரு கூட்டுறவு அங்காடியும் செயல்பட்டு வருகின்றன.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி[தொகு]

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- காசிம்புதுப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று காசிம்புதுப்பேட்டையில் உள்ளது. இப்பள்ளியில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் 165 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அஞ்சல் நிலையம்[தொகு]

காசிம்புதுப்பேட்டையில் கீரமங்கலம் அஞ்சல் நிலையத்தின் கிளை ஒன்று உள்ளது. இவ்வூர் மக்கள் இந்த அஞ்சலகத்தில் உள்ள விரைவு அஞ்சல், கிராம அஞ்சலக சேமிப்பு, கடித போக்குவரத்து போன்ற வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

அங்கன்வாடி மையம்[தொகு]

இம்மையத்தில் காசிம்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள ஒன்று முதல் நான்கு வயது குழந்தைகளுக்கு சத்துணவு, சத்து மாவு போன்றவை வழங்கப்படுகின்றன. மேலும் முன் பருவக் கல்வியும் இங்கு கற்றுத்தரப்படுகிறது.

புகைப்படத்தொகுப்புகள்[தொகு]

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- நுழைவாயில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- காசிம்புதுப்பேட்டை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்புதுப்பேட்டை&oldid=3725372" இலிருந்து மீள்விக்கப்பட்டது