போதேந்திர சரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ ஸ்ரீ

போதேந்திர சரஸ்வதி

சுவாமிகள்
சுய தரவுகள்
பிறப்பு
புருசோத்தமன்

17ஆம் நூற்றாண்டு
இறப்பு1692
கோவிந்தபுரம், தஞ்சாவூர்
நினைவிடம்போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமாதி
சமயம்இந்து
பதவிகள்
பதவிக்காலம்1638[1]–1692
முன் இருந்தவர்விஸ்வகேந்திர சரஸ்வதி சுவாமிகள்

போதேந்திர சரஸ்வதி (Bodhendra Saraswathi, 1610-1692) தமிழ்நாடு மாநிலத்தின், காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் 59வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் விதேகமுக்தி அடைந்தவர். சதாசிவ பிரமேந்திரர் மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தவர்.

இளமை வாழ்க்கை[தொகு]

போதேந்திர சரசுவதி, கேசவபாண்டுரங்க யோகி - சுகுணா இணையருக்கு 1610இல் காஞ்சிபுரத்தில் புருசோத்தமன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் 59வது மடாதிபதியான விஸ்வகேந்திர சரசுவதி சுவாமிகள், மெய்யறிவு நிரம்பிய புருசோத்தமனின் திறமையைப் பாராட்டி, சங்கரமடத்தின் இளைய மடாதிபதியாக, போதேந்திர சரசுவதி என்ற புதிய பெயர் சூட்டி நியமித்தார். ஆத்மபோதர் எனும் குருவால் பயிற்றுவிக்கப்பட்ட போதேந்திர சரசுவதி சுவாமிகள், இளம் வயதிலே சுருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இந்து சமய வேத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றார். நாள்தோறும் ஒரு இலட்சம் இராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பர்.[2]

கோவிந்தபுரம்[தொகு]

போதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் காவேரி ஆற்றங்கரையில் அமைந்த தஞ்சாவூர் பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார்.[3] இக்கிராமத்திலேயே சமாதி அடைய முடிவெடுத்தார்.[3] 1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் யோக நிலையில் அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.[3] 1962ஆம் ஆண்டில் முழு நிலவு நாளான்று விதேக முக்தி அடைந்தார். போதேந்திர சரசுவதி சுவாமிகளின் சமாதியை காஞ்சி சங்கர மடத்தினர் பராமரிக்கின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Prakashanand Saraswati, The true history and the religion of India: a concise encyclopedia of authentic Hinduism, p. 510
  2. The Saints of the Cauvery Delta .P.50
  3. 3.0 3.1 3.2 R. Krishnamurthy (1979). The Saints of the Cauvery Delta. Delhi: Concept Publishing Company. பக். 53. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போதேந்திர_சரஸ்வதி&oldid=3805525" இலிருந்து மீள்விக்கப்பட்டது