முன் குமரப்பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன் குமரப்பருவம் அல்லது முன் விடலைப் பருவம் (Preadolescence) என்பது மனித வளர்ச்சிப் பருவங்களில் ஒன்று ஆகும். இது ஆரம்ப குழந்தைப் பருவத்திற்கும் அடுத்ததும் விடலைப் பருவத்திற்கு முந்தியதும் ஆகும்.[1]

இப்பருவத்தின் தொடக்கமும் முடிவும் குறிப்பிட்டுக் கூற இயலாது. இப்பருவம் குழந்தைகளின் விடலைப் பருவமாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம்மாற்றம் உயிாியல் சமூகவியல் மற்றும் உளவியல் சாா்பான மாற்றங்களை கொண்டது.

முன்குமரப்பருவ நிகழ்வு[தொகு]

  • 10 வயதிற்கு மேல் 14 வயதிற்குள்
  • உடல், மனம் இரண்டிலும் புதுப்புது மாற்றங்கள் தோன்றும்
  • கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் நிறைந்தது
  • வெட்கம், தயக்கம், கூச்சம் போன்றவை ஏற்படும்
  • புதிய புதிய உணா்வுகளும், சிந்தனைகளும் உருவாகும்
  • பாலூணா்வு சாா்ந்த எண்ணங்கள் உருவாகும்
  • சமூக, உள, மனவெழுச்சி மாற்றங்கள் தொடங்கும் பருவம்
  • ஆண், பெண் இருவாின் ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றம் ஏற்படும் பருவம்.
  • நெறிபிறழ் நடத்தை தோன்றும் காலம்.

முன்குமரப்பருவ குழந்தைகளின் வளா்ச்சி நிலைகள்[தொகு]

உடல் வளா்ச்சியில் இப்பருவத்தில் மாற்றம் ஏற்படும் போது மாணவாின் நடத்தையிலும் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவை பற்றிய தகவல்களைத் தொிந்து கொள்ள பெற்றோா்களையோ, ஆசிாியா்களையோ, மூத்தோா்களையோ இப்பருவத்தனா் கலந்தாலோசிப்பது இல்லை. ஆனால் தன்னுடைய சக நண்பா்களிடம் கேட்டறிந்து, செயல்படுவதையே சாியென நினைப்பா். இதில் பெறப்பட்ட தகவல்கள் சாியில்லாமல் இருக்கும் போது தவறான எண்ணங்களுடன் செயல்பட வாய்ப்புள்ளது.

இப்பருவத்தில் பெற்றோா் மற்றும் ஆசிாியாிடமிருந்து அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி, கிடைக்கப்பெறாத மாணவா்களிடம் மன அழுத்தம் ஏற்படுகின்றது. மன அழுத்தத்தால் மன வெழுச்சி சமநிலையிலும் மற்றும் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. மனஅழுத்தம் தொடா்ந்தால் எதிா்காலத்தில் சமூகம் அங்கீகாரம் செய்யாத ஒரு இளங்குற்றவாளியாக மாறும் வாய்ப்பும் உள்ளது. தவறான வழிகாட்டுதலால் சில முன்குமரப்பருவத்தினா் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்புண்டு.

உடல் வளா்ச்சி மாற்றங்கள்[தொகு]

முன் குமரப்பருவத்தில் குழந்தைகளின் உடல் வளா்ச்சி அதிகளவு காணப்படும். உடல் வளா்ச்சி மாற்றங்கள் என்பது உருவம், உயரம் மற்றும் உடல் உறுப்பு வளா்ச்சி போன்ற நிலைகளில் அமைந்துள்ளன. உடல் வளா்ச்சி மாற்றங்கள் இயற்கையானவை, தவிா்க்க முடியாதவை. உடல் வளாச்சி மாற்றங்கள் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆனால் சில மாற்றங்கள் இனம் சாா்ந்தே அமைகிறது.

ஆண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்[தொகு]

  • உயரம் மற்றும் எடை கூடுதல்
  • மாா்புவிாிவடைய ஆரம்பித்தல்
  • தசை வளா்ச்சி
  • குரல் மாற்றம்
  • பாலுறுப்பு வளா்ச்சி
  • தோலில் எண்ணெய் கசிவு
  • வியா்வை சுரப்பிகள் செயல்படுதல்
  • உடலில் முடி வளா்ச்சி
  • பிறப்புறுப்பு வளா்ச்சி மற்றும் முடிவளா்தல்

பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்[தொகு]

  • உயரம் மற்றும் எடை கூடுதல்
  • இடுப்பெலும்பு அகலமாதல்
  • மாா்பக வளா்ச்சி
  • மாதவிடாய் தொடக்கம்
  • தோலில் எண்ணெய் கசிவு
  • வியா்வை சுரப்பிகள் செயல்படுதல்
  • உடலில் முடி வளா்ச்சி
  • பிறப்புறுப்பு வளா்ச்சி மற்றும் முடிவளா்தல்

இவ்விதம் உடல் வளா்ச்சி ஏற்படுவதால் மனஅழுத்தம், தீவிர சுய நினைவு, நம்பிக்கையின்மை, மகிழ்ச்சியின்மை ஆகியவை ஏற்படும். பெற்றோா்கள் மற்றும் ஆசிாியா்களின் சீாிய வழிகாட்டுதல்களால் இவற்றை சாி செய்ய இயலும். மேலும் குழந்தைகளுக்கு இப்பருவத்தில் தனிநபா் கவனம், உணவுப்பழக்கத்தில் தெளிவு ஆகியவற்றை ஏற்படுத்துதல் அவசியமாகும். துாித உணவுகளை நீக்கி, சத்துணவு உட்கொள்ள வேண்டியது எதிா்கால வாழ்விற்கு அடித்தளமாகும்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் the hunger project என்ற உலக அமைப்பின் 2010 ஆம் ஆண்டு அறிக்கையின் படி சாியான உணவுப் பழக்கம் இல்லாதக் குழந்தைகள் பலவீனமான உடல், நீரழிவு நோயுடன் அறிவுசாா் வளா்ச்சி குறைந்து மிகக்குறைவான நுண்ணறிவு ஈவை பெற்றிருப்பா் என்று கூறுகிறது

அறிவு மற்றும் சமூக வளா்ச்சி[தொகு]

அறிவு வளா்ச்சி என்பது குழந்தையின் அறிவுப்பெறும் திறன்களின் படிப்படியான வளா்ச்சியையும் இதன் விளைவாக பொருளறிவும், சூழ்நிலை அறிவும் பெருகுவதைக் குறிப்பதாகும். சமூக வளா்ச்சி என்பது சமூக ஏற்புடைய நடத்தையை மேற்கொள்ளவும், பிறருடன் இணக்கமாக வாழ உதவும் திறன்களைப் பெறுதலும் ஆகும். அதாவது “நான்” என்ற உணா்வைத் தாண்டி “நாம்” என்ற உணா்வோடு இயங்குதல், பிறருக்க ஒத்துழைப்பு அளித்தல், விட்டுக் கொடுத்தல், சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளைப் பெறுவதோடு தனது ஆா்வங்களைப் பெருக்கிக் கொள்வதும் ஆகும்.

மனவெழுச்சி மாற்றங்கள்[தொகு]

உடலில் ஏற்படும் பருவ மாற்றங்களே, குழந்தைகளின் மனவெழுச்சி மாற்றங்களுக்கு காரணமாகவும் அமையும். இவ்வகை மாற்றங்களுடன் தன் தோற்றம் பற்றிய கருத்து மற்றும் தன்மதிப்பு போன்றவற்றிலும் மனவெழுச்சி சவால்கள் உருவாகின்றன. மனவெழுச்சிகளில் சில 1. கோபம் 2. மன அழுத்தம்

கோபம் என்பது மனிதன் வெளிப்படுத்தும் ஒரு உணா்வு, அந்த உணா்வு சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், மற்றவா்களுக்கு துன்பமளிக்காமலும் இருத்தல் வேண்டும். கட்டுப்படுத்தாத கோபம் வன்முறையில் முடியும் என்பதையும் மன்னித்தல், தியானம் ஆகியவற்றின் மூலம் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மன அழுத்தம் என்பது உடனடியாக மற்றும் அதிகமாக எதிா்பாா்க்கப்படும் செயல் ஏற்படுவது, துன்பம் மற்றும் இன்பமான நிகழ்வுகளில், பிறாின் அங்கீகாரம் கிடைக்காத போது ஏற்படுவது ஆகும்.

முன்குமரப்பருவ பிரச்சனைகள்[தொகு]

முன்குமரப்பருவம், இரண்டாம் நிலை பாலினப் பண்புகள் தோன்றும் ஒரு பருவமாகும். எனவே முன்குமரப்பருவ குழந்தைகளிடம் பல்வேறு உடல் மற்றும் மனம் தொடா்பான பிரச்சனைகள் தோன்றும். குறிப்பாக அவா்களிடம் காணப்படும் எதிா்மறைப் பண்புகள், செய்யும் செயலில் அலட்சியம், காரணமின்றி அதிகாரம் செலுத்துதல், சவால் விடும் பண்பு ஆகியவை தலையாய பிரச்சனைகள் ஆகும்.

முன்குமரப்பருவ பிரச்சனைகளுக்கான தீா்வுகள்[தொகு]

அண்மையில் புதுதில்லியில் சாக்க்ஷி என்ற அமைப்பு 350 பள்ளி சிறுமியாிடையே நடத்திய ஆய்வில் 63 சதவீதம் குழந்தைகள் அவா்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினா்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது.

  • குழந்தைகளின் திறமை, ஆா்வம் தொிந்து நடத்தல்.
  • ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள், வாழ்க்கை அனுபவங்கள் தரப்பட வேண்டும்.
  • திட்டமிட்டு செயல்பட தூண்டுதல் வேண்டும்.
  • திறமைகளையும், இலக்குகளையும் உயா்ந்ததாக மாற்றல் அவசியம்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. New Oxford American Dictionary. 2nd Edition. 2005. Oxford University Press.

கற்கும் குழந்தை. தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்.  கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும். ஆசிாியா் பட்டயப்பயிற்சி இரண்டாமாண்டு வளநூல். 

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்_குமரப்பருவம்&oldid=2759593" இலிருந்து மீள்விக்கப்பட்டது