டெர்மாபிராசியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெர்மாபிராசியன் (Dermabrasion) என்பது சருமத் திட்டமிடலின் ஒரு வகையாகும். இது தோல் மருத்துவர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவரால் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படக் கூடியது. லேசர் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே டெர்மாபிராசியன் செய்யப்பட்டு வந்துள்ளது. அத்துடன் சருமத்தின் மேல் மற்றும் இடைப்பட்ட அடுக்குகளில் ஏற்படும் சிராய்ப்பு போன்ற பாதிப்புகளை கம்பியுடன் கூடிய தூரிகைகள், வைர சக்கரம், உப்புத்தாள், உப்புப் படிகங்கள் அல்லது மற்ற பொருட்களின் உதவியுடன் சரிசெய்கின்றனர். நுண் டெர்மாபிராசியன் இதைப் போன்றதல்ல. நுண் டெர்மாபிராசியன் புதிய செயல்முறை மற்றும் ஒப்பனை செய்யக்கூடிய வழிமுறைகளை உள்ளடக்கியது. இதனை மருத்துவர் அல்லாத பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், வீட்டிலுள்ள அதிக பயிற்சிபெறாத தனி நபர்கள் ஆகியோர் கூட தற்காலத்தில் செய்கின்றனர்.

டெர்மாபிராசியன் வழிமுறைகள் அறுவை சிகிச்சை, ஆக்கிரமிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதற்கு சாதாரண மயக்க மருந்துகள் கொடுக்கப்படும். இவை அறுவை சிகிச்சைக்கென அமைக்கப்பட்ட மையங்கள் அல்லது தொழிலக மருந்தக மையங்களில் செயல்படுத்தப்படும். மேல் தோலின் உயர் அடுக்கு முதல் கீழ் அடுக்கு வரை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால், இச்செயல்பாடு நுண்வலைய அடித்தோல் வரை செயல்பட்டு சிறிது இரத்தம் கசிதலும் ஏற்படலாம். ஆதலால் டெர்மாபிராசியன் அதிகாரப்பூர்வ மையங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இச்செயல்பாடுகளின் மூலம் வடு தோன்றுதல், தோல் நிறமாற்றம் ஏற்படுதல், நோய் தொற்று ஏற்படுதல் மற்றும் முகத்தில் நச்சுயிரி கிருமி ஏற்படுதல் போன்றவை நிகழும் வாய்ப்புகள் உள்ளது. சில வலுவான டெர்மாபிராசியன் செயல்பாடுகளில் அதிகப்படியான இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளது, அத்தகைய சமயங்களில் தகுந்த சிகிச்சைப் பொருட்கள் குறிப்பிட்ட அழுத்தத்துடன் பயன்படுத்தப்படும். அதற்குப் பிறகு, சருமப் பகுதி சராசரியாக 7 முதல் 30 நாட்கள் எடுத்துக்கொள்ளும். டெர்மாபிராசியன் தற்போதைய காலகட்டத்தின்படி குறைவான அளவே பயிற்சி பெறுகின்றனர். அத்துடன் குறைவான அளவிலான மருத்துவர்கள் மட்டுமே சிறந்த பயிற்சி பெற்றவர்களாகவும், அறுவை சிகிச்சை செய்யுமளவிற்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் உள்ளனர்.சில புதிய சிகிச்சை முறைகளால் டெர்மாபிராசியன் சிகிச்சை முறை நீக்கப்பட்டு வருகிறது. இதில் கார்பன் டை ஆக்சைடு பயன்படுத்துதல் அல்லது எர்பியம் : YAG லேசர் பயன்படுத்துதல் போன்றவை இந்த புதிய சிகிச்சை முறையில் அடங்கும். டெர்மாபிரசனுடன் ஒப்பிட்டு பார்கையில் லேசர் தொழில்நுட்பம் முறையானது இரத்தக் கசிவு மற்றும் சிகிச்சையளிப்பவர்களின் திறனை குறைவாகப் பயன்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் சிறப்பம்சங்கள் கொண்டதாக உள்ளது.

சற்று மங்கலான சருமத் தோற்றம் மற்றும் ஆழமான வடு, தோலின் சமனிலையற்ற தன்மை போன்ற சருமப் பிரச்சினைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை சரியான தீர்வினைத் தரும். தோலின் மிருதுவானத் தன்மையினை அதிகரித்தல், சிறிய தழும்பு மற்றும் வடுக்களை நீக்குதல் போன்றவை இந்த சிகிச்சையின் முக்கியத் தீர்வுகளாகும். பிறப்பு முதலே இருந்து வரும் வடு மற்றும் சமனிலையற்ற சருமம், வயது முதிர்ந்த தோற்றம், சுருக்கங்கள் ஆகியவற்றினை மாற்றிக்கொள்ள இந்த சிகிச்சை மிகவும் உதவும்.[1] தொழில்நுட்ப ரீதியான சிகிச்சைகளின் உதவியால் தோல் திட்டமிடல் அமைந்துள்ள வகையில் இந்த டெர்மாபிராசியன் அமைந்துள்ளது. அத்துடன் லேசர் போன்ற நவீன சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, இதன் சிகிச்சைக்கான விலையும் குறைவு. இருப்பினும் இவை நவீன சிகிச்சைகளின் மூலம் கிடைக்கும் அதே முடிவுகளை தரவல்லது.[2]

நுண் டெர்மாபிராசியன்[தொகு]

சருமத்தின் வெளிப்புறத்தில் உள்ள இறந்த தோலினை உரிக்கும் செயல்முறை போன்று செயல்படுத்துவது நுண் டெர்மாபிராசியன் வழிமுறையாகும்.[3] இதில் இரு பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று தோலினை உரிப்பதற்கான படிகங்கள் அல்லது வைர செதில்கள். மற்றொன்று தேவையான சருமத்தினை மெதுவாக மேலெழும்பச் செய்யும் இயந்திரச் செயல்பாடு. இதனை சரும நிபுணர்கள் செயல்படுத்தும் தனிப்பட்ட அலுவலகங்கள் முறையான செயல்பாடுகளின்படி செய்தல் வேண்டும்.[4] இவை வீட்டிலும் சில இயந்திரங்களின் உதவியால் செய்யப்படலாம்.[5] முடிதிருத்து மற்றும் அழகு நிலையங்கள், பல்வேறு வகையான வீட்டுப் பயன்பாட்டு இயந்திரங்கள் போன்றவையாக சீர்படுத்தக்கூடிய உறிஞ்சும் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.

நுண்டெர்மாபிராசியன் செயல்முறையின் நன்மைகள்[தொகு]

1. எளிமையான செயல்பாடு

2. ஆக்கிரமிப்பு அல்லாத செயல்முறை

3. வலி குறைவு

4. கர்ப்பமுற்றிருக்கும்போதும் மற்றும் பாலூட்டும்போதும் பாதுகாப்பானது

5. மயக்க மருந்துகள் தேவையில்லை

6. ஆரம்ப செயல்பாடுகள் மற்றும் தோல் மீளப்பெறுதல் விரைவாக நடைபெறும்

7. எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை

8. அனைத்து விதமான நிறம் மற்றும் தோலின் வகைகளும் பயன்படுத்தலாம்

9. தொடு உணர்வு அதிகம் கொண்ட சருமத்திற்கு உகந்தது

10. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு முன்னர் விரைவாக சருமம் பளபளப்பாக மாறுவதற்கு இந்த சிகிச்சை உதவும்

குறிப்புகள்[தொகு]

  1. malvi (2011-03-09). "The Ageing Skin - Plastic Surgery". Pharmaxchange.info. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
  2. J. P. Campbell, M. H. Terhune, S. D. Shotts, R. O. Jones (1998). "An ultrastructural comparison of mechanical dermabrasion and carbon dioxide laser resurfacing in the minipig model". Arch. Otolaryngol. Head Neck Surg. 124 (7): 758–760. doi:10.1001/archotol.124.7.758. பப்மெட்:9677109. http://archotol.ama-assn.org/cgi/reprint/124/7/758.pdf. 
  3. "Microdermabrasion". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
  4. Freedman Bruce, Rueda-Pedraza E, Waddell S. "The Epidermal and Dermal Changes Associated with Microdermabrasion." Dermatologic Surgery 27 (2001):1031-1034.
  5. "Home Microdermabrasion Guide". MicrodermabrasionHome. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்மாபிராசியன்&oldid=3676579" இலிருந்து மீள்விக்கப்பட்டது