பக்த சேதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த சேதா
இயக்கம்கே. சுப்பிரமணியம்
சி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
மதராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேசன்
கதைகே. சுப்பிரமணியம்
இசைவி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்[1]
நடிப்புபாபநாசம் சிவன்
கொத்தமங்கலம் சுப்பு
ஜி. சுப்புலட்சுமி
எஸ். ஆர். ஜானகி
வி. சுப்புலட்சுமி
குமாரி ரத்னம்
ஒளிப்பதிவுகமல் கோஷ்
படத்தொகுப்புஆர். ராஜகோபால்
கலையகம்மோஷன் பிக்சர்சு புரொடியூசர்சு, மதராசு
விநியோகம்ஜெமினி பிக்சர்சு சர்க்கியூட், மதராசு
வெளியீடுசனவரி 14, 1940
நீளம்15800 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த சேதா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2][3]

கதைச் சுருக்கம்[தொகு]

பாண்டவர்கள் வனவாசம் செய்யும் போது, துரியோதனனின் ஆட்சி அத்தினாபுரத்தில் நடக்கிறது.[4] துரோணாச்சாரியார் (கொத்தமங்கலம் சுப்பு) பிரதம குரு.[4] சேதா (பாபநாசம் சிவன்) ஒரு தாழ்த்தப்பட்ட சக்கிலிய சாதியைச் சேர்ந்தவர்,[4] செருப்புத் தைத்து அத்தினாபுரத்திற்கு அருகில் ஒரு சேரியில் வசிக்கும் ஒரு விஷ்ணு பக்தர். சேதாவைப் போன்றவர்களுக்கு கடவுளை வணங்குவதற்கான எந்த உரிமையும் இல்லை என்று நம்பும் துரோணர், சேதாவை இழிவான முறையில் நடத்துகிறார். சேதாவின் மகன் சேவா (மாஸ்டர் ஆர். திருமலை), துரோணரின் மகள் சாந்தாவை (ஜி. சுப்புலட்சுமி) காதலிக்கிறார். சேதா அவர்களின் காதலைக் கண்டு அதிர்ச்சியடைகிறார், ஆனால் சாதிக்கும் மதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை கடவுள் கருத்தில் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும், சேவாவின் காதலைக் கண்டுகொண்ட துரோணர், அதற்கு நேர்த்தியாக, உடனடியாக சேதாவிற்கு ஒரு ஆயிரம் சோடி செருப்புகளை பகல் நேரத்திற்கு முன்பே தயாரிக்கும்படி கட்டளையிடுகிறார், மேலும் அவர் அந்த பணியைச் செய்யத் தவறினால் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்படுவார் எனக் கட்டளையிடுகிறார். சேதா செருப்பை தயாரிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்திற்குப் பிறகு, அவர் முற்றிலும் களைத்துப்போய், ஓய்வெடுக்க கண்களை மூடிக்கொள்கிறார். இருப்பினும் அவர் தூங்கி எழுந்த போது, ​​ஆயிரம் சோடி செருப்புகள் தயாராக இருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்படுகிறார். அது கடவுளின் செயல் என்பதை அவர் உணர்கிறார். துரோணரும் விஷ்ணுவிடம் சேதாவின் பக்தியை உணர்ந்து சேவா-சாந்தா திருமணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்.[2]

நடிகர்கள்[தொகு]

நடிகர் பாத்திரம்
பாபநாசம் சிவன் சேதா
கொத்தமங்கலம் சுப்பு துரோணாச்சாரியார்
ராஜகோபாலய்யர் துரியோதனன்
ஆர். எஸ். ராமசுவாமி ஐயங்கார் விட்டுணு
மாஸ்டர் ஆர். திருமலை சேவா
பி. ஆர். ராஜகோபாலய்யர் சோமதத்தன்
சி. என். சதாசிவம் எக்ஞேசுவரன்
ராமானுஜாச்சாரி சகுனி
ஜாலி கிட்டு ஐயர் சாது சித்தானந்தர்
எஸ். ராமச்சந்திரய்யர் பூக்கார முனியன்

இவர்களுடன் தஞ்சை மணி ஐயர், முத்துசாமி அய்யர், எக்ஞ தீட்சிதர், சி. வி. ஆர். சந்திரன், வள்ளிநாயகம், மணி ஆகியோரும் நடித்தனர்.[4]

நடிகைகள்[தொகு]

நடிகை பாத்திரம்
ஜி. சுப்புலட்சுமி சாந்தா
எஸ். ஆர். ஜானகி காந்தா (சேதாவின் மனைவி)
வி. சுப்புலட்சுமி பூக்கார முனியம்மா
குமாரி ரத்தினம் தேசாந்திரி

தயாரிப்பு[தொகு]

பக்த சேதா திரைப்படத்தின் மூலம் ஜி. சுப்புலட்சுமி, மாஸ்டர் ஆர். திருமலை ஆகியோர் அறிமுகமானார்கள். திருமலை இதற்குப் பிறகு நடிக்கவில்லை.[1] தன்னுடைய வாகன ஓட்டியான முத்து ஐயரின் உறவுக்காரப் பெண்ணான 16 வயது ஜி. சுப்புலட்சுமியை இயக்குநர் கே. சுப்பிரமணியம் கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தார்.[5] சுப்பிரமணியமே படத்தைத் தயாரித்து தனது சொந்த நிறுவனமான மதராசு யுனைட்டர் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேசன் மூலம் வெளியிட்டிருந்தார்.[1] இதற்கான திரைக்கதை, வசனங்களை அவரே எழுதியிருந்தார்.[1][2] சி. வி. ராமகிருஷ்ணன் உதவியாளராக இருந்தார்.[4] திரைப்பட வெளியீட்டின் போது, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிக்கு எதிரே ஜி. சுப்புலட்சுமியின் முழுமையான உருவப் படம் (வெட்டுரு) ஒன்று தயாரிக்கப்பட்டு அதற்கு விலையுயர்ந்த பட்டுச் சேலை ஒன்று அணிவிக்கப்பட்டது. சேலை ஒவ்வொரு வாரமும் மாற்றப்பட்டு வந்தது. இவ்வகையான விளம்பர உத்தி முதற்தடவையாகவும் கடைசித் தடவையாகவும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பயன்படுத்தப்பட்டது.[2]

பாடல்கள்[தொகு]

பக்த சேதா பாடல்களை பாபநாசம் சகோதரர்கள் பாபநாசம் சிவன், ராஜகோபாலய்யர் ஆகியோர் எழுதியிருந்தனர். வித்துவான் வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார் இசையமைத்திருந்தார்.[4]

எண் பாடல் பாடியவர் இராகம் தாளம்
1. தந்ததே ஆனந்தம் - பகவான் பாபநாசம் சிவன் சிந்து பைரவி ஆதி
2. செருப்பு வாங்கலையோ மாஸ்டர் திருமலை
ஜி. சுப்புலட்சுமி
சிஷ்யன்
செஞ்சுருட்டி
கானடா
கமாஸ்
திச்ர ஏகம்
ரூபகம்
சதுச்ர ஏகம்
3. பாரம்மா இது பரிமள மிகுமலர் மாலை மாஸ்டர் திருமலை செஞ்சுருட்டி ஆதி
4. மாதருக்கேற்ற பூவு - வாசமிக வீசும் பூவு வி. சுப்புலட்சுமி தெம்மாங்கு ஏகம்
5. எள்ளி லெண்ணெய் - மலரில் மணம் பாபநாசம் சிவன் ஆனந்தபைரவி விருத்தம்
6. ஸ்ரீ ஹரே கருணா மாஸ்டர் திருமலை
எஸ். ஆர். ஜானகி
குழுவினர்
- -
7. கண்டேன் கண்டேன் கண்டேன் - கமலப் பதமலர் ஜி. சுப்புலட்சுமி மோகனம்
நாகசுவராவளி
மோகனம்
பந்துவராவளி
ஆதி
8. மோகன முரளீ தாரா டி. வி. ரத்தினம் குழுவினர் செஞ்சுருட்டி ஆதி
9. ஏனின்னும் தயை வல்லையா - ஏழை என்மீது ஜி. சுப்புலட்சுமி
மாஸ்டர் திருமலை
அடானா ஆதி
10. பேதையுன் அற்புத லீலையை யெவ்விதம் ஜி. சுப்புலட்சுமி மாண்டு ஆதி
11. தந்தையின் பரிசிதோ சிறையோ முறையோ ஜி. சுப்புலட்சுமி இந்துத்தானி மெட்டு -
12. இனி ஒருகணம் உனை மறவேன் பாபநாசம் சிவன் சிறீரஞ்சனி ரூபகம்
13. தேவா தேவா - கருணையுமில்லையோ மாஸ்டர் திருமலை
ஜி. சுப்புலட்சுமி
இந்துத்தானி மெட்டு -
14. தூய்மை யோகமாயினாய் ஜி. சுப்புலட்சுமி நாதநாமக்கிரியை ரூபகம்
15. ஏதுமறியேன் ஐயா - நான் பாபநாசம் சிவன் சிம்மேந்திரமத்திமம் ஆதி
16. என்னரும் சோதரர்காள் மாஸ்டர் திருமலை
ஜி. சுப்புலட்சுமி
சிறுவர்கள்
சக்ரவாகம் ஆதி
17. துன்பம் இன்றி இன்பம் உலகினில் மாஸ்டர் திருமலை
சிறுவர்கள்
இந்துத்தானி மெட்டு -
18. நட்ட கல்லைத் தெய்வமென்பார் சிப்பாய்கள் சாமா ஆதி
19. மண்ணில அரும் மானிடராய் வந்தும் மாயன் பாபநாசம் சிவன் விருத்தம் -
20. ஜே ஜே ராம் ராம் - முகுந்த ஹரி ஹரி குழுவினர் நாமாவளி -
21. பரம புருசா - பரந்தாமா குழுவினர் காபி -

இசைக்கலைஞர்கள்[தொகு]

இப்படத்திற்கு வித்துவான் வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்காரும் MUAC வாத்திய கோஷ்டியும் இசையமைத்தார்கள்.[4]

இசைக்கலைஞர் இசைக்கருவி
வி. எஸ். பார்த்தசாரதி மகா நாடக வீணை
ஹரி ராவ் பிடில்
சுப்பையா பிள்ளை புல்லாங்குழல்
ராதா கிருஷ்ணய்யர் புல்புல் தரங்கம்
பெருமாள் நாயுடு கிளாரினெட்
இலட்சுமணன் ஆர்மோனியம்
அலி ரசா சாரங்கி
வெங்கடேசுவரா சித்தார், சுவரஜதி, ஜலதரங்கம்
ஏ. ரெங்கசுவாமி ஐயர் தபேலாதரங்கம், தபேலா
ராஜகோபாலய்யர் மிருதங்கம்
விட்டல் ராவ் டோலக்

வரவேற்பு[தொகு]

பக்த சேதா பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படம் "புதிய கதாநாயகி சுப்புலட்சுமி மற்றும் வலுவான கருப்பொருளுக்காக நினைவில் உள்ளது" என்று ராண்டார் கை குறிப்பிடுகிறார்.[2] இத்திரைப்படம் 1942 இல் தெலுங்கில் ஜீவன முக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. தெலுங்குப் படத்தில் பிரபல கருநாடக இசைப் பாடகர் வி. வி. சடகோபன் விஷ்ணுவாக நடித்திருந்தார்.[2] திரைப்படம் வெற்றி பெறவில்லை.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004) (in Tamil). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170529102319/http://www.lakshmansruthi.com/cineprofiles/1940-cinedetails19.asp. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Randor Guy (26 June 2010). "Bhaktha Chetha (1940)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170529102159/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Bhaktha-Chetha-1940/article16267877.ece. பார்த்த நாள்: 29 May 2017. 
  3. ராண்டார் கை (26 சூன் 2010). "Bhaktha Chetha (1940)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2015.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 பக்த சேதா பாட்டுப்புத்தகம். மதராசு: ஆனந்த விகடன் அச்சகம். 1940. 
  5. கேமரா கண் தந்த கமல் கோஷ் பரணிடப்பட்டது 2020-06-22 at the வந்தவழி இயந்திரம், கலைமாமணி வாமனன்
  6. Narasimham, M. L. (13 November 2011). "Jeevanmukthi (1942)". The Hindu இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170529102443/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/jeevanmukthi-1942/article2622692.ece. பார்த்த நாள்: 29 May 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_சேதா&oldid=3791398" இலிருந்து மீள்விக்கப்பட்டது