தீர்த்தமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீர்த்தமலை
வருவாய் கிராமம்
அரூரில் இருந்து தீர்த்தமலையின் தோற்றம்
அரூரில் இருந்து தீர்த்தமலையின் தோற்றம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு636906

தீர்த்தமலை (Theerthamalai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.[1]. இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 556 குடும்பங்களும் 2,055 மக்களும் வசிக்கின்றனர்.[2]

தீர்த்தகிரீசுவரர் கோயில்[தொகு]

இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் அமைந்துள்ளது.[3][4][5]. இங்கு கோயில் வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியாக நீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடைக் காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறுவதில்லை. இப்புனித நீரை மக்கள் தீர்த்தமாக தெளித்துக் கொள்கின்றனர். மேலும் இங்கு அக்கினிதீர்த்தம், குமாரதீர்த்தம் கெளரிதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. எனவே இது தீர்த்தமலை என பெயர் பெற்றது. இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். இம்மலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு[எப்போது?] 100 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று இடங்களில் மலைப்பகுதியில் மண் புரட்டி போட்டது போல் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
  2. "Theerthamalai Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  3. தீர்த்தகிரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தொடக்கம், நாளிதழ்: தினமணி, நாள்: செப்டம்பர் 8, 2009
  4. தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் கோயில் கும்பாபிஷேகம்
  5. அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தினமலர்-கோயில்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தமலை&oldid=3611870" இலிருந்து மீள்விக்கப்பட்டது