அடியார்க்கு நல்லார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடியார்க்கு நல்லார் தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர். இவர் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது. இவருக்கு முன் எழுந்த அரும்பத உரையாசிரியரைத் தழுவி இவர் உரையெழுதியுள்ளார்.[1] இவர் சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. இவ்வுரையில் இசைத்தமிழுக்கு இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. இவருடைய உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது.

பிறந்த ஊர்[தொகு]

அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் கொங்கு மண்டலத்தில் உள்ள நிரம்பை என்னும் ஊர் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[2][3]

அடியார்க்கு நல்லார்க்கு உதவிய நூல்கள்[தொகு]

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதியில் இசை, கூத்து பற்றி உரை எழுத உதவிய நூல்கள் எவை எவை என்பதை அவரது உரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஐந்து. அவை இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் என்பன.
  • அட்டவணை
இசை, கூத்து நூல்கள்

அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நூல்கள்[தொகு]

அடியார்க்கு நல்லார் தம் உரையில் குறிப்பிடும் நூல்கள் இவை: பஞ்சபாரதீயம், செயிற்றியம், இசைத்தமிழ் – பதினாறு படலம், அகத்தியம், பரதம், குணநூல், சயந்தம், முறுவல், கூத்தநூல், அணியியல்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
  • ச. வே. சுப்பிரமணியன், அடியார்க்கு நல்லார் உரைத்திறன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
  2.  குருவை உணர்ந்த இளங்கோவடிகள் உட்கொண்டு சொன்ன
    தருவை நிகரும் சிலப்பதிகாரத் தனித்தமிழுக்
    கருமை உரை செய் அடியார்க்கு நல்லார் அவதரித்து
    அருமைப் பொழி நிரம்பைப் பதியும் கொங்கு மண்டலமே. 95

  3. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை
  4. கன்னிமரா நூலக நூல்வரிசையில்அடியார்க்கு நல்லார் உரைத்திறன் நூல்[தொடர்பிழந்த இணைப்பு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடியார்க்கு_நல்லார்&oldid=3591622" இலிருந்து மீள்விக்கப்பட்டது