இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  இந்தோ-ஆஸ்திரேலிய புவித்தட்டு, அந்தியத் தட்டாகவும் ஆஸ்திரேலியத் தட்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளதை வரைபடம் காட்டுகிறது.

இந்தோ-ஆசுதிரேலியப் புவித்தட்டு என்பது ஆஸ்திரேலியா கண்டத்தையும் சூழவுள்ள பெருங்கடல்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும். இது வடமேற்கே இந்தியத் துணைக்கண்டத்தையும் தன் அதன் நீர்ப் பகுதிகள் வரை உள்ளடக்கியுள்ளது. இத்தட்டின் முனை, யூரேசியத் தட்டை நெருக்கி, இமயமலையுடன் மோதுகையில் ஈடுபடுவதன் காரணமாக இந்தோ-ஆசுதிரேலியப் புவித்தட்டு இரு வெவ்வேறு தட்டுக்களாகப் பிரிந்து வருவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன[1]. இவ்விறு தட்டுகளும் முறையே "இந்தியப் புவித்தட்டு" எனவும் "ஆசுதிரேலியப் புவித்தட்டு" எனவும் வழங்கப்பட்டு வருகின்றன.

புவியியல்[தொகு]

இந்தியா, மெகனேசியா (ஆஸ்திரேலியா, நியூ கினி, தாஸ்மானியா), நியூசிலாந்து, நியூ கலிடோனியா ஆகியன அனைத்தும் பண்டையகாலத்தில் (200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பெருங்கண்டமாக இருந்த கோண்டுவானாவின் பகுதிகள் ஆகும். கடல்பகுதி விரிவடைவினால் இப்பகுதிகள் பிளவடைந்தன. ஆனாலும், விரிவடைந்த மையங்கள் ஒரு தனிப் புவித்தட்டாக ஆயிற்று.

இப்புவித்தட்டு வடக்கில் இருந்து 35 பாகை கிழக்காக ஆண்டுக்கு 67 மிமீ வேகத்தில் நகருவதாக ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]