கெக்காட்

ஆள்கூறுகள்: 40°08′26″N 44°49′07″E / 40.140425°N 44.818511°E / 40.140425; 44.818511
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெக்காட்
கெக்காட் is located in ஆர்மீனியா
கெக்காட்
Shown within Armenia
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கொக்ட், கொடயக் மாகாணம், ஆர்மீனியா
புவியியல் ஆள்கூறுகள்40°08′26″N 44°49′07″E / 40.140425°N 44.818511°E / 40.140425; 44.818511
சமயம்ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை
Official name: Monastery of Geghard and the Upper Azat Valley
வகை:கலாச்சாரம்
வரையறைகள்:ii
கொடுக்கப்பட்ட நாள்:2000 (24 வது தொடர்)
மேற்கோள் எண்.960
சமயம்:மேற்கு ஆசியா

கெக்காட் (Geghard, ஆர்மீனியம்: Գեղարդ, பொருள்: "ஈட்டி") என்பது செங்குத்துப் பாறைகளினால் சூழப்பட்ட, அருகிலுள்ள மலையினால் பகுதியாக செதுக்கியமைக்கப்பட்ட, ஆர்மீனியாவின் கொடயக் மாகாணத்தில் உள்ள மத்திய கால துறவியர் மடம் ஆகும். இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன உலகப் பாரம்பரியக் களம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

பிரதான சிறு கோயில் 1215 இல் கட்டப்பட, துறவியர் மடத் தொகுதி 4 ஆம் நூற்றாண்டில் கிரகரியினால் குகையின் உள்ளே புனிதத் தன்மையான நீரூற்றுப் பகுதியில் கட்டப்பட்டது. துறவியர் மடம் மூலப் பெயராக "அயிர்வாங்" என்ற பெயரை (Ayrivank; Այրիվանք) பெற்றிருந்தது. இதன் அர்த்தம் "குகைத் துறவியர் மடம்" என்பதாகும். இப்பெயர் தற்போது துறவியர் மடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. கெக்காட் அல்லது முழுமையாகக் குறிப்பிடப்படும் "கெக்காட்வாங்" (Geghardavank; Գեղարդավանք) என்பது "ஈட்டித் துறவியர் மடம்" எனப் பொருள் கொள்கிறது. புனித ஈட்டி (இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது காயப்படுத்தியது) திருத்தூதர் யூதா ததேயுவால் ஆர்மீனியாவுக்கு கொண்டு வரப்பட்டதென்றும், ஏனைய புனிதப் பண்டங்களோடு வைக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது. அது தற்போது எச்மியாட்சின் பேராலய கருவூலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[2]

துறவியர் மடத்தை சுற்றியுள்ள காட்சிமிக்க உயரமான செங்குத்துப் பாறைகள் அசட் ஏரி, பள்ளத்தாக்கு ஆகியவற்றின் பகுதியாகவுள்ளன. துறவியர் மடம் உள்ளிட்ட பகுதிகள் உலகப் பாரம்பரியக் களம் என பட்டியலிடப்பட்டுள்ளது. துறவியர் மடத் தொகுதியில் உள்ள சில கோயில்கள் முற்றிலும் செங்குத்துப் பாறைகளில் குடைந்து செய்யப்பட்டுள்ளதோடு, மற்றவை குகையைவிட சற்றுக் கூடியவையாகவும், ஏனைய சில விபரிக்கப்பட்ட கட்டமைப்புக்களாகவுள்ளன. இவை யாவற்றினதும் சுவருள்ள பகுதிகளின் அறைகள் செங்குத்துப் பாறையின் ஆழத்தில் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் செதுக்கப்பட்ட தானாக நிற்கும் ஆர்மீனிய சிலுவைக் கற்கள் தனித்துவம் கொண்டுள்ளதுடன், ஆர்மீனியாவுக்கு உல்லாசப் பயணிகளை தொடர்ச்சியாக கொண்டு வரும் காரணிகளில் ஒன்றாகவுள்ளது.

இங்கு வரும் உல்லாசப் பயணிகள் இதற்கு அருகிலுள்ள பாகால் கோயிலையும் சென்று பார்க்கின்றனர்.

வரலாறு[தொகு]

கிரகரியின் பாரம்பரியத்தின்படி, துறவியர் மடம் 4 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அப்பகுதிக் குகையிலுள்ள நீரூற்று கிறித்தவத்திற்கு முன்பே புனிதமாகக் கருதப்பட்டது. இதிலிருந்து அயிர்வாங் (குகைத் துறவியர் மடம்) என்ற பெயர் உருவாகியது. முதலாவது துறவியர் மடம் அராபியர்களால் 19 ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது.

அயிர்வாங் கட்டமைப்புக்கள் எதுவும் இப்போது இல்லை. 4 ஆம், 8 ஆம், 10 ஆம் நூற்றாண்டு ஆர்மீனிய வரலாற்றாளர்களின்படி, துறவியர் மடம் சமய கட்டடங்கள் என்பதற்கப்பால், நன்கு அமர்த்தப்பட்ட குடியிருப்பாளர்களினதும் சேவை அமைப்பினாலும் உள்ளடக்கமாகவுள்ளது. அராபிய கலிபாவின் ஆர்மீனிய துணை ஆட்சியாளர் நாசர் பெறுமதியான சொத்துக்களை 923 இல் கொள்ளையடித்து பாரியளவில் அயிர்வாங்கிற்கு சேதம் ஏற்படுத்தினான். நிலநடுக்கமும் சேதத்தை இதற்கு ஏற்படுத்தியது.

வளாகம்[தொகு]

தற்போது துறவியர் மட வளாகம் தள வரிசையமைக்கப்பட்ட பாதையின் முனையில், வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பழங்கள், நினைவும் பொருட்கள் விற்போரும் உள்ளனர். உல்லாசப் பயணிகள் வருகையின்போது இசைக் குழு இசை மீட்டிக் கொண்டு இருக்கும்.

பிரதான வாயிலுக்குச் சென்றதும், மேற்கில் உள்ள குன்றுப் பகுதியில் சிறிய குகைகள், சிற்றாலயங்கள், செதுக்கல் வேலைப்பாடுகள், கட்டுமானங்கள் என்பன காணப்படும். வாயிலிக்கு முன்னான வடக்கில் அமைந்துள்ள செங்குத்துப் பாறையில் உள்ள சில ஆழமற்ற சாய்வில் மக்கள் தங்கள் விரும்பம் நிறைவேற வேண்டும் என்று கூழாங்கற்களை எறிவதுண்டு. வாயிலின் உள் சிறிது சென்றதும் உள்ள சுற்றுச்சுவர் 12 – 13 ஆம் நூற்றாண்டு கோட்டை மதிற்சுவர் வளாகத்தின் மூன்று பக்கங்களை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளது. நான்காவது சுவரை பின்னாலுள்ள செங்குத்துப்பாறை பாதுகாக்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. UNESCO entry on Geghard
  2. Holy Lance transferred from Holy Echmiadzin to Geghard for the first time in 200 years

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெக்காட்&oldid=3816850" இலிருந்து மீள்விக்கப்பட்டது