கால அளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கால அளவியல் (Horology) என்பது, நேரத்தை அளவிடும் கலை அல்லது அறிவியல் ஆகும். மணிக்கூடுகள், கைக்கடிகாரங்கள், சூரியக்கடிகாரங்கள், மணற்கடிகாரங்கள், நேரப்பதிவிகள், கடற்காலமானிகள், அணுக்கடிகாரங்கள் ஆகியவை அனைத்தும் காலத்தை அளக்கப் பயன்படும் கருவிகளுக்கு எடுத்துக்காட்டுக்கள். தற்காலப் பயன்பாட்டில் கால அளவியல் பொதுவாக எந்திர நேரம் அளக்கும் கருவிகள் பற்றியது ஆகும்.

கால அளவியலில் ஆர்வம் உள்ளவர்கள் கால அளவியலாளர்கள் எனப்படுவர். இச்சொல்லைத் தொழில்சார்ந்த வகையில் நேரம் அளக்கும் கருவிகளோடு தொடர்புள்ளவர்களும் (கைக்கடிகாரம் செய்வோர், மணிக்கூடு செய்வோர்), இவற்றின்மீது பொதுவான ஆர்வம் கொண்டோரும், அறிஞர்களும் பயன்படுத்துகின்றனர். கால அளவியலுக்கும், கால அளவியலாளர்களுக்கும், தொழில்சார்ந்தனவும், அறிவுசார்ந்தனவுமான ஏராளமான அமைப்புக்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால_அளவியல்&oldid=1962891" இலிருந்து மீள்விக்கப்பட்டது