தானியங்கிப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித இராணுவ வீரர்கள் போன்றோ அவர்களுக்கு மேற்பட்ட செயல்திறனோ கொண்ட தானியங்கிகளால் கட்டமைக்கப்படும் படை தானியங்கிப் படை (robot army) எனப்படுகிறது. போர் தானியங்கிகள் போரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தானியங்கிகள் ஆகும். இவை பல வகைப்படும். இரண்டாம் உலகப் போரில் இருந்தே சில இருந்து வருகின்றன. இன்றைய கணினி இலத்திரனியல் தொழில்நுட்பம் தற்காலப் போர் தானியங்கிகளின் ஆற்றலை பல்மடங்கு பெருக்கி உள்ளன.

இன்று, போரில் கண்ணிவெடிகளையும் குண்டுகளையும் விதைக்கவும் அகற்றவும், வேவு பார்க்க பல தரப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இவற்றின் திறன் மட்டுப்படுத்தப்பட்டதே. பல, மனிதர்களால் இயக்கப்படுவன. ஆளில்லா தாங்கி, ஆளில்லா வானூர்தி, ஆளில்லா நில ஊர்தி என பலதரப்பட்ட தானியங்கிகள் இன்று போர்க்களத்தில் உள்ளன. எதிர்காலப் போர்க்களங்களில் இவற்றின் பயன்பாடுகள் மிகும். விரைவில், முற்றிலும் தாமாகவே இயங்கும் தானியங்கி இராணுவ அமைப்பை பயன்படுத்த ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. தென் கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளும் தானியங்கி இராணுவங்களை உருவாக்கி வருகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியங்கிப்_படை&oldid=3819218" இலிருந்து மீள்விக்கப்பட்டது