தேனூர் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தேனூர்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர் அ. செந்தமிழ்செல்வன்
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி மணப்பாறை
சட்டமன்ற உறுப்பினர்

ப. அப்துல் சமது (திமுக (மமக))

மக்கள் தொகை 3,256
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.nammaooruthenur.blogspot.in


தேனூர் ஊராட்சி (Thenur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3256 ஆகும். இவர்களில் பெண்கள் 1630 பேரும் ஆண்கள் 1626 பேரும் உள்ளனர்.

முக்கிய தகவல்கள்[தொகு]

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள சிற்றூர் தேனூர். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளநாடு, வைரம்பட்டி, கொடும்பபட்டி, புதுப்பட்டி, பிராம்பட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மீனவேலி ஊராட்சிகள் இதன் எல்லையாக உள்ளது.

திருச்சியில் இருந்து 50 கிமீ , மருங்காபுரியில் இருந்து 15 கி.மீ, சென்னையில் இருந்து 402 கி.மீ தொலைவில் தேனூர் அமைந்துள்ளது.

இங்கு பிரதான மொழி தமிழ் ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் தச்சு வேலை, கட்டிட பணி, கால்நடை பராமரிப்பு ஆகியவையும் முக்கிய தொழிலாக உள்ளது.

கிரிக்கெட் , கபாடி ஆகியவை முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.


[7]தேனூர் தகவல்கள்

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 411
சிறு மின்விசைக் குழாய்கள் 6
கைக்குழாய்கள் 10
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 13
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2
ஊரணிகள் அல்லது குளங்கள் 11
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள் 9
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 24
ஊராட்சிச் சாலைகள் 4
பேருந்து நிலையங்கள் 9
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:

  1. மேடுகாடு
  2. முருக்கப்பட்டி
  3. போலம்பட்டி
  4. வடக்கிக்களம்
  5. வையாபுரிகாடு
  6. கிழக்குகளம்
  7. களத்துப்பட்டி
  8. வரதகோன்பட்டி
  9. தேனூர்

கல்வி நிலையங்கள்[தொகு]

  1. ஊ.ஒ.துவக்கப்பள்ளி, தேனூர்
  2. ஊ.ஒ.துவக்கப்பள்ளி, முருக்கப்பட்டி
  3. ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, போலம்பட்டி
  4. அரசு உயர்நிலை பள்ளி, தேனூர்

ஸ்ரீ அரவான் கோவில்[தொகு]

தேனூரில் மகாபாரத மாவீரன் அர்ச்சுனனின் மகன் அரவானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் 26.05.2016 அன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். [9]

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "மருங்காபுரி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. http://www.onefivenine.com/india/villages/Tiruchirappalli/Marungapuri/Thenur
  8. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  9. http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/05/27021141/A-great-number-of-devotees-visit-the-temple-consecrated.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனூர்_ஊராட்சி&oldid=3559533" இலிருந்து மீள்விக்கப்பட்டது