அமீஷ் திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீஷ் திரிபாதி
2015 இல் திரிபாதி
2015 இல் திரிபாதி
பிறப்பு18 அக்டோபர் 1974 (1974-10-18) (அகவை 49)
மும்பை, இந்தியா[1]
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்புனித சேவியர் கல்லூரி, மும்பை, இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
வகைபுனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • The Immortals of Meluha
  • The Secret of the Nagas
  • The Oath of the Vayuputras
  • Scion of Ikshvaku
குறிப்பிடத்தக்க விருதுகள்சொசையிட்டி இளம் சாதனையாளர் விருது, இலக்கியம்[2]
இந்தியாவின் புது சின்னங்கள் (India's New Icons)[3]
முதல் 100 பிரபலங்கள் பட்டியல்[4][5][6]
ஆண்டின் தகவற்தொடர்பாளர், 2014[7] ஆண்டின் சிறந்த நபர், 2013 -இந்தியாவின் ரேடியோ ஒன்[8]
இந்தியாவின் பெருமை 2014[9]
இந்தியாவின் முதல் இலக்கிய பாப்நட்சத்திரம் 2015[10]
அதிக செல்வாக்கு பெற்ற 50 இளம் இந்தியர்கள்[11]
துணைவர்பிரீதி வியாஸ்
பிள்ளைகள்நீல் திரிபாதி
இணையதளம்
authoramish.com

அமீஷ் திரிபாதி (Amish Tripathi, பிறப்பு: 18 அக்டோபர் 1974) தன்னுடைய மெலூஹாவின் அமரர்கள், நாகர்களின் ரகசியம், வாயுபுத்ரர் வாக்கு ஆகிய நூல்கள் அடங்கிய ”சிவா முத்தொகுதி” என்ற புகழ் பெற்ற நாவல்களுக்காக அறியப்படும் பிரபல இந்திய எழுத்தாளர்[12]. இவருடைய மிகவும் அதிகப்படியான வாசகர்களை சென்றடைந்த நூலான 'மெலூஹாவின் அமரர்கள்', வெளியிட்ட முதல் வாரத்திற்குள்ளாகவே அதிகப்படியாக விற்பனையானது[13][14]. இந்திய பதிப்பகத்துறையில் இந்த சிவா முத்தொகுதியின் 25 இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு, மிக வேகமாக 70 கோடி ரூபாய் வரை விற்று தீர்ந்தன[15] ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் இவரை இந்தியாவின் சிறந்த முதல் 100 பிரபலங்கள் வரிசையில் 2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இடம் பெறச் செய்தது.[16][17][18][19]. அமீஷ் பிரபல உலகத்தலைவர்களுக்கான எயிசென்ஹோவர் பயிற்சிக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்[20].

'பணித்துறை அமீஷ் திரிபாதி ஒதிஷாவிலுள்ள ரூர்கெலா அருகில் வளர்ந்தார்.[21][22] அவர் மும்பையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரி மற்றும் கொல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் முன்னால் மாணவராவார். தான் ஒரு வரலாற்று அறிஞராக வர விரும்பினாலும், தன்னுடைய நிதிச்சூழல் காரணமாக அவரால் அந்த துறையை தேர்ந்தெடுக்க முடியவில்லை.[23] இவர் தன்னுடைய எழுத்துப்பணிக்கு வருவதற்கு முன்பு, 14 வருட காலம் ஸ்டேண்டர்ட் சார்டர்ட், டிபிஎஸ் பேங்க் மற்றும் ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் இன்ஸூரன்ஸ் ஆகிய நிதித்துறை சேவை வழங்கும் நிறுவன்ங்களில் பணியாற்றியுள்ளார்.[24]

திரிபாதியினுடைய முதல் சிறந்த படைப்பு மற்றும் சிவா முத்தொகுதியின் முதல் பாகமான “மெலூஹாவின் அமரர்கள்” பிப்ரவரி 2010ல் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாவது பாகமான “நாகர்களின் இரகசியம்” 12 ஆகஸ்ட் 2011இலும் மூன்றாவது தொகுதியான “வாயுபுத்ரர் வாக்கு” 27 பிப்ரவரி 2013இலும் வெளியிடப்பட்டது. இந்த சிவா முத்தொகுதியானது ஹிந்து கடவுளான சிவனின் வாழ்க்கை மற்றும் சாகசங்கள் பற்றிய கற்பனை புனையலாகும்.

இதன் முதல் பாகத்தின் திரைப்பட உரிமையை தர்மா ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் 2012ன் முற்பகுதியில் பெற்றது. சிவா முத்தொகுதியின் 2 மற்றும் 3ம் பாகங்கள் இங்கிலாந்தில் ஜோ ஃப்லெட்சர் புத்தக நிறுவனம் (குவெர்கஸ் புத்தக முத்திறை அடையாளத்துடன்) மூலமாக முறையே ஜனவரி 2013 மற்றும் நவம்பர் 2013ல் வெளியிடப்பட்டது.

அமீஷ் திரிபாதி அவர்கள் இந்தியாவின் ”புதிய அடையாளம்” என்பதாக டிஎன்ஏ நாளிதழின் 8ம் ஆண்டிற்கான சிறப்பிதழில் சமீபத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் இலக்கியத்திற்கான இளைய சமூக சாதனையாளர் விருதையும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய பொதுமக்கள் தொடர்பு சபையால் (PRCI) வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சிறந்த தகவல் தொடர்பாளர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய பொதுமக்கள் தொடர்புத்துறை, ஊடகங்கள், மனிதவளத்துறை நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து இந்த விருதை மும்பையில் நடைபெற்ற 8ம் உலக தகவல் தொடர்பு கூட்டத்தில் அறிவித்தனர். இவர் 2013ம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக ரேடியோ வன் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய சமீபத்திய புத்தகமான "இக்‌ஷ்வாகுவின் வழித்தோன்றல்கள்" 2015, ஜூன் 22ல் வெளியிடப்பட்டது. இது இராமச்சந்திரா தொடரின் முதல் தொடராகும். இது இராமாயண இதிகாசத்தினைப் பற்றிய கற்பனைப் புனையலாகும். இது சிவா முத்தொகுதியின் பின் வரும் கடைசித்தொகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Author Amish > Quick Facts". Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  2. "Society Young Achievers Award for Literature". [IndiaTimes]. 23 October 2013. http://www.indiatimes.com/entertainment/bollywood/celebs-attend-young-achievers-awards-108144-3.html. 
  3. "India's New Icons". [DNA Syndication]. 31 July 2013.
  4. "Celebrities Top 100 list 2012". [Forbes India]. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  5. "Celebrities Top 100 list 2013". [Forbes India]. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  6. "Forbes India Celebrity 100 List 2014". [Forbes India].
  7. "Amish Tripathi Gets Communication Award 2014". [The Asian Age]. Archived from the original on 2016-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
  8. "John Abraham talking about today's 'Man of The Year' - Amish Tripathi". Radio One. https://soundcloud.com/chris-radio-one/john-abraham-talking-about-4. 
  9. "Dr Mukesh Batra Felicitated with Pride of India award by WCRC". [News PR]. Archived from the original on 2015-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  10. "Nexbrands felicitates and acknowledges the Visionaries of India". [India Education Diary]. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  11. "The 50 Most Influential Young Indians". [GQ\. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  12. "Lessons from PK: Beliefs may be cast in stone". Archived from the original on 2015-08-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. Sheela Reddy (18 July 2011). "The Lo-Cal Literati". Outlook. http://www.outlookindia.com/article.aspx?277582. பார்த்த நாள்: 27 August 2012. 
  14. Amish Tripathi (18 September 2010). "The MBA Writer". OPEN. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.
  15. "The Myths of Amish". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/amish-tripathi-new-book-myth-ram/1/445483.html. 
  16. Lopex, Rachel (26 April 2013). "How Amish Tripathi changed Indian publishing". Hindustan Times (HT Media Ltd) இம் மூலத்தில் இருந்து 28 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130428120335/http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/Cover-Story-How-Amish-Tripathi-changed-Indian-publishing/Article1-1050648.aspx. பார்த்த நாள்: 29 April 2013. 
  17. "Forbes India 2012". [Forbes India]. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  18. "Forbes India 2013". [Forbes India]. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  19. "Forbes India Celebrity 100 list 2014". [Forbes India].
  20. "Eisenhower Fellowships India Chapter Celebrations on 21st October". [The Alternative]. 
  21. http://www.filmfare.com/interviews/-i-watched-love-story-4-times-in-a-day-amish-tripathi-3930.html
  22. http://www.telegraphindia.com/1121007/jsp/odisha/story_16059713.jsp
  23. "Amish Tripathi’s going digital". DNA. 9 April 2010. http://www.dnaindia.com/lifestyle/report_amish-tripathi-s-going-digital_1369184. 
  24. "Bestselling bosses". Business Today. 30 October 2011. http://businesstoday.intoday.in/story/corporate-honchos-writing-fiction-books/1/19200.html. பார்த்த நாள்: 7 June 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீஷ்_திரிபாதி&oldid=3541312" இலிருந்து மீள்விக்கப்பட்டது