சியால்கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியால்கோட்
سیالکوٹ
நகரம்
அடைபெயர்(கள்): இக்பாலின் நகரம்
நாடு பாக்கித்தான்
அரசு
 • D.C.Oநதீம் சர்வார்
பரப்பளவு
 • மொத்தம்3,016 km2 (1,164 sq mi)
ஏற்றம்256 m (840 ft)
மக்கள்தொகை (1998)[1]
 • மொத்தம்421,502
 • அடர்த்தி140/km2 (360/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
அஞ்சல் சுட்டு எண்51310
தொலைபேசி குறியீடு எண்052
Number of Union councils152
Sialkot Government Website

சியால்கோட் (Sialkot) (உருது: Nastaliq|سيالكوٹ) பாகிஸ்தானின் வடகிழக்கில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாகும். பாகிஸ்தானின் மக்கட்தொகை அளவில் சியால்கோட் நகரம் 12வது இடத்தில் உள்ளது..[1]1185ஆண்டில் சியால்கோட் நகரம் ஆப்கானியர் கோரி முகமதுவால் வெல்லப்பட்டது.

வரலாறு[தொகு]

பண்டைய வரலாறு[தொகு]

பண்டைய வரலாற்றில் சியால்கோட், மௌரியப் பேரரசு, இந்தோ சிதியன் பேரரசு, குசான் பேரரசு, குப்தப் பேரரசு, ஹர்ஷவர்தனர் மற்றும் கனிஷ்கர் பேரரசில் ஒரு பகுதியாக விளங்கியது.

மத்தியகால வரலாறு[தொகு]

சியால்கோட், கி பி 1185இல் கோரி முகமது, பஞ்சாப் பகுதியின் சியால்கோட்டை கைப்பற்றினார். பின்னர் மொகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது.

மொகலாயப் பேரசின் இறுதி கட்டத்தில், பேரரசின் வடமேற்கு பகுதியில் இருந்த சியால்கோட், சுவத் மாவட்டம், முல்தான், ஆப்கானித்தான் பஷ்தூன் மற்றும் குவட்டா இனமக்களின் கட்டுப்பாட்டில் சென்றது. 1748ஆம் ஆண்டில் சியால்கோட், சம்பாரியல், பஸ்ரூர் மற்றும் தஸ்கா ஆகிய நான்கு மாவட்டங்களை ஆப்கானிய துராணிப் பேரரசர், அகமது ஷா துரானி என்பவர் ஆப்கானித்தானுடன் இணைத்துக் கொண்டார். 1751இல் லாகூர் பகுதியை சுற்றியுள்ள மாவட்டங்களை ஆட்சி செய்து கொண்டிருந்த அகமது ஷா துராணியின் மகன் தைமூரிடமிருந்து, சீக்கிய பேரரசர் ரஞ்சித் சிங் சியால்கோட் பகுதியை கைப்பற்றினார். [2] ஆங்கிலேய-சீக்கியப் போரில், சியால்கோட்டை, சீக்கியப் பேரரசிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனியர் கைப்பற்றினர். சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858இல் சியால்கோட் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கையில் சென்றது.

நவீன வரலாற்றில்[தொகு]

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் சியால்கோட் பாகிஸ்தான் ஆளுகையில் சென்றது. சியால்கோட் பகுதியில் இருந்த இந்து மற்றும் சீக்கியர்கள் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் இருந்த இசுலாமியர் சியால்கோட் போன்ற பாகிஸ்தான் பகுதிகளுக்குச் சென்றனர்.

இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானிய இராணுவம் சியால்கோட்டை தக்க வைத்துக் கொண்டது.[3] [4]

1971 இந்திய பாகிஸ்தான் போரில் சியால்கோட் பகுதியிலும் இரு தரப்புக்குமிடையே போர் நடைபெற்றது. இப்போரில் பாகிஸ்தான் இராணுவ மேஜர் ஜெனரல் இப்திகார் ஜாஞ்சுவா கொல்லப்பட்டார். பின்னர் சிம்லா ஒப்பந்தப்படி இரு தரப்புப் படைகளும் பன்னாட்டு எல்லைகளுக்குத் திரும்பின.

பொருளாதரம் & தொழில்[தொகு]

உலகில் உற்பத்தி செய்யப்படும் கால்பந்துகளில் 70% சியால்கோட்டில் தயாரிக்கப்படுகிறது. சியால்கோட்டில் ஆண்டிற்கு 40 முதல் 60 மில்லியன் கால்பந்துகள் கைகளால் தயாரிக்கப்படுகிறது. கையால் தைக்கப்படும் கால்பந்து தொழிற்சாலைகள் சியால்கோட்டில் அதிகம் உள்ளன.[5]2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட்ட கால்பந்துகள் சியால்கோட்டில் தயாரிக்கப்பட்டவையாகும்.[6]

தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சியால்கோட்டில் உள்ளன.

பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது சியால்கோட்டில் குழல் இசை பை கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. தற்போது 20 குழல் இசை கருவி தொழிற்சாலைகள் உள்ளது.[7]

கல்வி[தொகு]

சர் மும்மது இக்பால்
இக்பால் மன்சில்

லாகூர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம், பாத்திமா ஜின்னா மகளிர் பல்கலைக்கழகங்கள், சியால்கோட்டில் ஒரு வளாகத்தை வைத்துள்ளது. மேலும் சியால்கோட்டில், எட்டு மகளிர் பட்டப் படிப்பு கல்லூரிகளும், எட்டு வணிக பட்டப் படிப்பு கல்லூரிகளும், ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு ஹோமியோபதி கல்லூரியும், ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரியும், ஒரு சட்டக் கல்லூரியும், பல்நோக்கு தொழில்நுட்ப பயிற்சிப் பள்ளியும், 250 மேனிலைப் பள்ளிகளும் கொண்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

பேருந்து வசதிகள்[தொகு]

பெரும் தலைநெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 5, சியால்கோட் நகரம், பாகிஸ்தானின் மற்ற அனைத்து நகரங்களையும் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

தொடருந்து வசதிகள்[தொகு]

சியால்கோட் தொடருந்து சந்திப்பு பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், லாகூர், குவெட்டா, குஜ்ரன்வாலா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[8]

விமான சேவைகள்[தொகு]

சியால்கோட் நகரத்திலிருந்து 14 கி மீ தொலைவில் உள்ள சியால்கோட் பன்னாட்டு விமான நிலையம், மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கிறது.

காலநிலை[தொகு]

சியால்கோட் நகரம், இளவேனிற் காலம், முதுவேனிற்காலம், குளிர்காலம், மழைக் காலம் என நான்கு பருவ காலங்கள் கொண்டது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Sialkot, Pakistan
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 26.1
(79)
30.0
(86)
35.0
(95)
42.2
(108)
47.3
(117.1)
48.9
(120)
44.4
(111.9)
41.1
(106)
39.0
(102.2)
37.2
(99)
33.3
(91.9)
27.2
(81)
48.9
(120)
உயர் சராசரி °C (°F) 18.5
(65.3)
21.0
(69.8)
25.7
(78.3)
32.8
(91)
38.0
(100.4)
39.9
(103.8)
34.9
(94.8)
33.6
(92.5)
33.6
(92.5)
31.7
(89.1)
26.1
(79)
20.1
(68.2)
29.7
(85.5)
தினசரி சராசரி °C (°F) 11.6
(52.9)
13.8
(56.8)
18.6
(65.5)
25.0
(77)
30.0
(86)
32.2
(90)
29.8
(85.6)
29.0
(84.2)
27.9
(82.2)
23.7
(74.7)
17.8
(64)
12.8
(55)
22.6
(72.7)
தாழ் சராசரி °C (°F) 5.0
(41)
7.1
(44.8)
11.8
(53.2)
17.3
(63.1)
22.0
(71.6)
25.1
(77.2)
25.1
(77.2)
24.8
(76.6)
22.3
(72.1)
16.0
(60.8)
9.6
(49.3)
5.6
(42.1)
16.0
(60.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) −1.1
(30)
-1.0
(30.2)
3.0
(37.4)
9.0
(48.2)
13.4
(56.1)
18.0
(64.4)
19.5
(67.1)
18.7
(65.7)
13.3
(55.9)
8.5
(47.3)
3.0
(37.4)
−0.6
(30.9)
−1.1
(30)
மழைப்பொழிவுmm (inches) 41.1
(1.618)
43.8
(1.724)
53.7
(2.114)
30.1
(1.185)
28.0
(1.102)
65.6
(2.583)
288.4
(11.354)
259.1
(10.201)
94.1
(3.705)
14.5
(0.571)
9.1
(0.358)
30.4
(1.197)
957.9
(37.713)
ஆதாரம்: NOAA (1971–1990)[9]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  2. Zutshi, Chitralekha (2003), Language of belonging: Islam, regional identity, and the making of Kashmir, Oxford University Press/Permanent Black. Pp. 359, ISBN 978-0-19-521939-5
  3. K Conboy, "Elite Forces of India and Pakistan" ISBN 1-85532-209-9, page 9
  4. The India-Pakistan Air War of 1965, Synopsis. Retrieved 26 May 2008 at the Internet Archive
  5. Hasnain Kazim (16 March 2010). "The Football Stitchers of Sialkot". Spiegel International. http://www.spiegel.de/international/world/0,1518,683873,00.html. பார்த்த நாள்: 7 November 2011. 
  6. http://www.thenews.com.pk/article-150235-Brazilian-ambassador-unveils-Pak-made-FIFA-soccer-ball
  7. "Punjab pays tartan homage to Caledonia | World news | The Observer". Guardian. 25 April 2004. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.
  8. Transport in Multan Lonely Planet Travel Information. Accessed 15 August 2009.
  9. "Sialkot Climate Normals 1971–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sialkot
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியால்கோட்&oldid=3526672" இலிருந்து மீள்விக்கப்பட்டது