துத்தநாக நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாக நைட்ரைடு
இனங்காட்டிகள்
1313-49-1 Y
பண்புகள்
Zn3N2
வாய்ப்பாட்டு எடை 224.15 கி/மோல்[1]
தோற்றம் சாம்பல் நிறத் தூள்[1]
அடர்த்தி 6.22 g/cm³, திண்மம்[1]
கரையாது (சிதைவடையும்)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cI80
புறவெளித் தொகுதி Ia-3, No. 206[1][2]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

துத்தநாக நைட்ரைடு (Zinc nitride) என்பது Zn3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். துத்தநாகம் மற்றும் நைட்ரசன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தூய்மையான நிலையில் இச்சேர்மம் கனசதுர அமைப்பில் காணப்படுகிறத[1][2]

வேதியியல் பண்புகள்[தொகு]

காற்றிலா சூழலில் துத்தநாகமைடு என்றழைக்கப்படும் துத்தநாக ஈரமீன், 200° செ வெப்பநிலையில் வெப்பச் சிதைவு மூலமாக துத்தநாக நைட்ரைடாக உருவாகிறது. [3] அமோனியா இவ்வினையில் உடன் விளை பொருளாக கிடைக்கிறது.[4]

3Zn(NH2)2 → Zn3N2 + 4NH3

துத்தநகத்தை 600° செ வெப்பநிலைக்கு அமோனியா பாய்வில் சூடுபடுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்.ஐதரசன் வாயு உடன் விளைபொருளாக உண்டாகிறது.[3][5]

3Zn + 2NH3 → Zn3N2 + 3H2

துத்தநாக நைட்ரைடு தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து அமோனியா மற்றும் துத்தநாக ஆக்சைடாக உருவாகிறத[3][4]

Zn3N2 + 3H2O → 3ZnO + 2NH3

துத்தநாக நைட்ரைடு, ஐதரோ குளோரிக் அமிலத்தில் [6]கரைகிறது. மின்வேதியியல் முறையில் மீள்வினையாக இலித்தியத்துடன் வினைபுரிகிறது.[7] மக்னீசியம் நைட்ரைடு (Mg3N2) மற்றும் இலித்தியம் நைட்ரைடு Li3N) போல இச்சேர்மமும் உயர் உருகுநிலை கொண்டுள்ளது[8].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sangeeta, D. (1997). Inorganic Materials Chemistry Desk Reference. CRC Press. பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-8900-9. http://books.google.com/?id=bdGXyilNsGMC&pg=PA278&dq=%22Zinc+nitride%22. பார்த்த நாள்: 2007-09-30. 
  2. 2.0 2.1 Partin, D. E.; Williams, D. J.; O'Keeffe, M. (1997). "The Crystal Structures of Mg3N2 and Zn3N2". Journal of Solid State Chemistry 132 (1): 56–59. doi:10.1006/jssc.1997.7407. Bibcode: 1997JSSCh.132...56P. http://www.ingentaconnect.com/content/els/00224596/1997/00000132/00000001/art97407. பார்த்த நாள்: 2015-11-02. 
  3. 3.0 3.1 3.2 Henry Enfield Roscoe; Carl Schorlemmer (1907) [1878]. A Treatise on Chemistry: Volume II, The Metals (4th ). London: Macmillan. பக். 650–651. http://books.google.com/?id=-K0EAAAAYAAJ&pg=PA650&dq. பார்த்த நாள்: 2007-11-01. 
  4. 4.0 4.1 Bloxam, C. L. (1903). Chemistry, Inorganic and Organic (9th ). Philadelphia: P. Blakiston's Son & Co.. பக். 380. http://books.google.com/?id=f9StqQ8YBtwC&pg=PA380. பார்த்த நாள்: 2007-10-31. 
  5. Thomas Martin Lowry (1922). Inorganic Chemistry. Macmillan. பக். 872. http://books.google.com/?id=umQ6AAAAMAAJ&dq=%22zinc+nitride%22&q=%22zinc+nitride%22. பார்த்த நாள்: 2007-11-01. 
  6. Comey, A. M.; Hahn, D. A. (1921). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ). New York: Macmillan. பக். 1124. http://books.google.com/?id=7L0MAAAAYAAJ&pg=PA1124. பார்த்த நாள்: 2007-11-01. 
  7. Amatucci, G. G.; Pereira, N. (2004). "Nitride and Silicide Negative Electrodes". in Nazri, G.-A.; Pistoia, G.. Lithium Batteries: Science and Technology. Kluwer Academic Publishers. பக். 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-7628-2. http://books.google.com/?id=k4duxuea3eIC&pg=PA256. பார்த்த நாள்: 2007-11-01. 
  8. Grolier Incorporated (1994). Academic American Encyclopedia. Danbury, CT: Grolier Inc.. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7172-2053-3. http://books.google.com/?id=YgI4E7w5JI8C&dq=%22zinc+nitride%22&q=%22zinc+nitride%22. பார்த்த நாள்: 2007-11-01. 

உசாத்துணை[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_நைட்ரைடு&oldid=3349106" இலிருந்து மீள்விக்கப்பட்டது