பன்னாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாள் தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் வேதாரணியம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2440 ஆகும். இவர்களில் பெண்கள் 1204 பேரும் ஆண்கள் 1236 பேரும் உள்ளனர். படித்தவர்கள் 90 % க்கு மேல்.

பெரும்பான்மையானவர்களின் தொழில் வேளாண்மை ஆகும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பெருமளவு எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆலயங்கள்[தொகு]

இரு சிவாலயங்களும் ஒரு மாரியம்மன் ஆலையமும் ஒரு அடைக்கலம் காத்த ஐயனார் ஆலயமும் இரு பெருமாள் ஆலயமும் ஒரு அண்ணன் செவந்தான் ஆலயமும் ஒரு பிடாரி அம்மன் ஆலயமும் இங்கு உள்ளன.

பள்ளிகள்[தொகு]

ஒரு தொடக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளியும் உள்ளது மேலும் மேல்நிலை கல்வியை பயில அருகிலுள்ள ஆயைக்காரன்புலம் நடேசனார் மேல்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

மல்லிகை பூ, நெல், வாழை, சிறுதானிங்கள் விவசாய விளைபொருட்கள். முக்கிய பணப்பயிராக சவுக்கு மர வளர்ப்பு உள்ளது. உணவை உவர்ப்பாக்க உப்பு எடுக்கப்படுகிறது. கிணற்று நீர் பாசனமும் வளப்படுத்துகிறது. பல குளங்கள் இங்குள்ளன. குளிர்காலத்தில் மிதபனியும், மழைக்காலத்தில் தேவையான அளவு மாரியும் பொழிந்து சீதோஷ்ண நிலை சிறப்பாய் அமையப்பெற்றது..

இந்த ஊரில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. வீட்டுக்கு ஒருவராவது அரசு பணியில் உள்ளனர். அதிகமாக ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு இணையாக காவல், தொலை தொடர்பு ஆகிய துறைகளிலும் பணியாற்றுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாள்&oldid=2110780" இலிருந்து மீள்விக்கப்பட்டது