வேலநாட்டி சோடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெலநாட்டு சோடர்கள்
வெலநாடு துர்ஜய தலைவர்கள்
முதலாம் கொங்க சோடர் 1076–1108
முதலாம் ராஜேந்திர சோடர் 1108–1132
இரண்டாம் கொங்க சோடர் 1132–1161
இரண்டாம் ராஜேந்திர சோடர் 1161–1181
மூன்றாம் கொங்க சோடர் 1181–1186
பிரித்திவிஸ்வர சோடர் 1186–1207
மூன்றாம் ராஜேந்திர சோடர் 1207–1216

வெலநாட்டி சோடர்கள் இவர்கள் கீழைச் சாளுக்கியர்களின் கீழ் போர் வீரர்கள் மற்றும் தளபதிகளாக பணியாற்றினர். பிறகு இவர்கள் தனி ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்களில் கொங்கா என்பவர் இவ்வரசை தோற்றுவித்தார். தற்போதைய குண்டூர் மாவட்டப் பகுதிகள், வெலநாடு என அழைக்கப்பட்டது.

கிபி 1076 இலிருந்து கிபி 1216 வரைக்கும் அவர்களுக்குத் தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. இவர்கள் குண்டூரை ஆண்டவர்கள். பின்னர் வேங்கியில் இருந்தனர். வெலநாட்டு சோழர்கள் துர்ஜய குடும்பத்தினர் என பல கல்வெட்டுகள் மூலம் அறியலாம். அந்த காலகட்டத்தில் ஆண்ட ஏழு வெலநாட்டு மன்னர்களில் மூன்று பேர் ராஜேந்திர சோழன் என்ற பெயரை வைத்திருந்தனர். பிற்காலத்தில் பாண்டியர்களுக்கும் காகதீய மன்னர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இவர்கள் மிகவும் அடிபட்டனர். முடிவில் காகதீயப் பேரரசில் இவர்கள் நாடு அடக்கப்பட்டுவிட்டது.

ஜாயப நாயுடு[தொகு]

ஜாயபநாயுடு அல்லது ஜாயபசேனானி என்பவர் இடைக்காலத்தில் தற்போதைய ஆந்திராவில் உள்ள வாரங்கல் பகுதியை ஆட்சி செய்த காகதீய மன்னர் கணபதி தேவா அவர்களின் இராணுவ தளபதியாக இருந்தார். இவர் கம்மவார் இனத்தைச் சேர்ந்தவர். காகதீய பேரரசர் கணபதி தேவா (1241 CE) கைகளில் வெலநாட்டு சோடர்கள் தோல்வியை தழுவிய பின்னர் பல நாயக்க வீரர்கள் வாரங்கல்லுக்கு இடம் பெயர்வதற்கும் காகதீய இராணுவத்தில் சேர்வதற்கும் வழிவகுத்தது. ஜாயபநாயுடு கம்மநாட்டின் ஒரு வீரம் மிக்க தளபதி ஆவார்த. இவர்காகதீய யானைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜெயபா நாயுடுவின் தங்கைகளான நாரம்மா பேரம்மா ஆகிய இருவரையும் காக்கத்திய பேரரசர் கணபதி தேவா திருமணம் செய்து கொண்டார்.

சிங்க இலச்சனை[தொகு]

வேலநாட்டி சோடர்கள் தங்களின் குல அடையாளமாக சிங்க இலச்சினையை பயன்படுத்தினார்கள்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலநாட்டி_சோடர்கள்&oldid=3869985" இலிருந்து மீள்விக்கப்பட்டது