அமில ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமில ஆக்சைடுகள் (Acidic oxides) என்பவை அலோகங்களின் ஆக்சைடுகளைக் குறிக்கும். தண்ணீருடன் வினைபுரிந்து அமிலங்களை உருவாக்குகின்ற கனிம வேதியியல் பொருட்கள் அமில ஆக்சைடுகள் எனப்படும் என்றும் அல்லது காரங்களுடன் வினைபுரிந்து உப்புகளை உருவாக்கும் வேதிப்பொருட்கள் அமில ஆக்சைடுகள் எனப்படுமென்றும் பொருள் கூறலாம். உயர் ஆக்சிசனேற்ற நிலைகளில் இவை அலோகம் அல்லது உலோகங்களின் ஆக்சைடுகளுமாக இருக்கலாம். பெரும்பாலும் அலோகங்கள் எரியும் போது இவை தோன்றுகின்றன. ஆக்சோ அமிலங்களில் உள்ள ஆக்சைடுகள் மட்டும் இருக்கும்வரை தண்ணீர் மூலக்கூறுகளை நீக்குதல் மூலமாக இவற்றின் வேதியியல் பண்புகளைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு தண்ணீர் நீக்கப்பட்ட ஆக்சைடுகளை அமில ஆக்சைடுகள் என்ற தொகுப்பு வகையில் பகுக்கலாம்.

அமில ஆக்சைடுகள் அரினீசியசு அமிலங்களைப் போல தண்ணீரில் ஐதரசன் அயனிகளின் அடர்த்தியை அதிகரிப்பதும் இல்லை பிரான்சுடெட் லார்ரி அமிலங்கள் போல புரோட்டான்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. எனினும், அவை இலூயிக் அமிலங்களாகச் செயல்படுகின்றன. ஏனெனில் அவை இலூயிக் காரங்களில் இருந்து மிகக் குறிப்பாக நீரிலிகளிடமிருந்து எலக்ட்ரான் இணைகளை ஏற்றுக் கொள்கின்றன[1]

உதாரணங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Principles of Modern Chemistry, 7th Edition. David Oxtoby, H. P. Gillis, Alan Campion. Published by Cengage Learning. Page 675-676. ISBN 978-0840049315
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமில_ஆக்சைடு&oldid=2747340" இலிருந்து மீள்விக்கப்பட்டது