ஊசிமுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊசிமுறி என்பது ஒரு தொகைச்சொல். ஊசியும் முறியும் என்பது இதன் விரி. ஊசி என்பது எழுத்தாணி. முறி என்பது எழுதும் ஓலை. ஒரு பாடலை எழுதும்போது அது முடிவதற்குள் இடையிலே ஊசி முறிந்துபோன பாடல் ஒன்றுக்கு ஊசிமுறி என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் கம்பர் காலத்து இடைக்காடர். இடைக்காடனார், இடைக்காட்டுச் சித்தர் ஆகிய புலவர்கள் வேறு.

ஊசிமுறிப் பாடல்[தொகு]

ஆற்றங்கரையி னருகிருக்கு மாமரத்திற்
காக்கை யிருந்து கககவெனக் - காக்கைதனை
எய்யக் கோலில்லாமல் … என்றானே
வையக் கோனாரின் மகன்.<ref>தனிப்பாடல் திரட்டு, பக்கம் 45-54 (பாடல் 60)

ஊசி முறிந்தது[தொகு]

ஆற்றங் கரையி னருகிருக்கு மாமரத்திற்
காக்கை யிருந்து கககவெனக் - காக்கைதனை
எய்யக்கோல் இல்லாமல்

என்று எழுதியதும் அவரது எழுத்தாணி முறிந்துவிட்டது. முறிந்தபோது எழுதிய சொல் நமக்குக் கிடைக்கவில்லை.

என்றானே
வையக் கோனாரின் மகன்.

என்று வரும் அதன் தொடர்ச்சி கிடைத்துள்ளது.

பாடலின் பொருள்[தொகு]

ஆற்றங்கரையில் மாமரம் ஒன்று இருந்தது. அதில் காக்கை ஒன்று இருந்துகொண்டு ‘க க க’ என்று கரைந்தது. மாடு மேய்க்கும் கோனார் ஒருவரின் மகன் அதனைக் குறிவைத்து எய்து அடித்து வீழ்த்த எண்ணினான். கோல் கிடைக்கவில்லை. (எழுத்தாணி முறிவு)

பாடலின் உட்பொருள்[தொகு]

காக்கை - எமன் க க க எனல் – எமன் கொக்கரிக்கும் ஒலி வையக் கோனார் - நாடாளும் அரசன் நாடாளும் அரசன் ஒருவன் தன்னைக் கொல்லவந்த எமனைக் கொல்ல விரும்பினான். அதற்குக் கருவிக்கோல் கிடைக்கவில்லை. சாவைத் தவிர்க்க முடியாது என்பது கருத்து.

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிமுறி&oldid=3437734" இலிருந்து மீள்விக்கப்பட்டது