கம்பர் காலப் பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பர் காலத்துப் பாண்டிய மன்னன் ஒருவன் பாடியதாக ஒரு பாடல் உள்ளது.[1] பொருள் கொடுத்தால் பாவலர்கள் போற்றுவார்கள். பொருள் கொடுக்காவிட்டால் தூற்றுவார்கள். சொன்ன சொல்லை மாற்றியும் பொருள் கூறுவர். ஆகவே பாவலர்கள் கூற்றுவனைக் காட்டிலும் கொடியவர்கள் என்று அவன் பாடியிருக்கிறான்.[2]

  • கம்பர் பாண்டியனை நீயா மன்னவன், என்னை நீ ஏற்றுக் கொள்ளவில்லையே, குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு உண்டோ? - என்றெல்லாம் இகழ்ந்து பாடிய பாடல்.[3]
  • பாண்டியனைச் சபித்துப் பாடிய பாடல்.[4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தனிப்பாடல் திரட்டு பக்கம் 45-54
  2. போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
    தூற்றினுந் தூற்றுவர் சொன்ன சொற்களை
    மாற்றினு மாற்றுவர் வன்கணாளர்கள்
    கூற்றினும் பாவலர் கொடிய ராவரே. – பாடல் 36

  3. மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ
    உன்னை யறிந்தோ தமிழை யோதினேன்- என்னை
    விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ
    குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு.- பாடல்37

  4. வில்லம்பு சொல்லம்பு மேதினியி லிரண்டுண்டு
    வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்- வில்லம்பு
    பட்டுதடா வென்மார்பிற் பாண்டியா நின்குலத்தைச்
    சுட்டுதடா வென்வாயிற் சொல்.(பாடல் 47)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பர்_காலப்_பாண்டியன்&oldid=2717701" இலிருந்து மீள்விக்கப்பட்டது