பலேடியம்(IV) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேடியம்(IV) புளோரைடு
Palladium(IV) fluoride
இனங்காட்டிகள்
13709-55-2 N
பண்புகள்
F4Pd
வாய்ப்பாட்டு எடை 182.41 g·mol−1
தோற்றம் இளஞ்சிவப்பு[1] அல்லது செங்கல் சிவப்பு [2] படிகத் திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பிளாட்டினம்(IV) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references


பலேடியம்(IV) புளோரைடு (Palladium(IV) fluoride) என்பது PdF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் பலேடியம் நாற்புளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. பலேடியம் இச்சேர்மத்தில் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.

தயாரிப்பு[தொகு]

பலேடியம்(II,IV) புளோரைடுடன் புளோரினை 300 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் 7 வளிமண்டல அழுத்தத்தில் பலநாட்களுக்கு வைத்திருந்தால் பலேடியம் நான்கு புளோரைடு உருவாகிறது.

வினைகள்[தொகு]

பலேடியம்(IV) புளோரைடு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி என்பதால் இது ஈரக்காற்றிலும் நீராற்பகுப்பு அடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rao, P. R.; Tressaud, A.; Neil Bartlett (chemist) (1976). "The tetrafluorides of iridium, rhodium and palladium". J. Inorg. Nucl. Chem. 28: 23–28. doi:10.1016/0022-1902(76)80588-X. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1152–1153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்(IV)_புளோரைடு&oldid=2052023" இலிருந்து மீள்விக்கப்பட்டது