ஆர்தர் பி. மெக்டொனால்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்தர் பி. மெக்டொனால்டு
Arthur B. McDonald
பிறப்புArthur Bruce McDonald
ஆகத்து 29, 1943 (1943-08-29) (அகவை 80)
சிட்னி நோவா இசுக்கோசியா
வாழிடம்கிங்சிட்டன், ஒன்ராறியோ
குடியுரிமைகனடியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்பிரின்சிட்டன் பல்கலைக்கழகம், குயின்சு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்தல்கவுசி பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
அறியப்படுவதுசூரிய நுண்நொதுமி (நியூத்திரினோ) நிறையுள்ளமை கண்டமை
விருதுகள்பெஞ்சமின் பிராங்கிளின் பதக்கம் (2007)
என்றி மார்சல் டோரி விருது (2011)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2015)

ஆர்தர் புரூசு மெக்டொனால்டு (Arthur 'Art' Bruce McDonald, பிறப்பு: ஆகத்து 29, 1943) கனடிய இயற்பியலாளரும், சத்பரி நுண்நொதுமி (நியூத்திரினோ0 வானாய்வகக் கழகத்தின் பணிப்பாளரும் ஆவார். நுண்நொதுமிகள் அல்லது நியூத்திரினோக்கள் நிறை ( திணிவு) ஏதும் கொண்டிருக்கின்றதா என்றிருந்த அடிப்படைக்கேள்விக்கு விடையாக அது ஒரு நிறையை (திணிவை)க் கொண்டுள்ளதைக் காட்டும் நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், சப்பானைச் சேர்ந்த தக்காக்கி கஜித்தாவுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nobel Prize in Physics 2015". www.nobelprize.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_பி._மெக்டொனால்டு&oldid=1998654" இலிருந்து மீள்விக்கப்பட்டது