வங்காளதேச இட்டாக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச இட்டாக்கா
টাকা
1000 வங்கித்தாள்
ஐ.எசு.ஓ 4217
குறிBDT (எண்ணியல்: 050)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு
மதிப்பு
துணை அலகு
 1/100பைசா
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)2, 5, 10, 20, 50, 100, 500 & 1000
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)1, 25, 40, 60
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 2, 5
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 5, 10, 25 & 50 பொய்ஷா
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) வங்காளதேசம்
வெளியீடு
நடுவண் வங்கிவங்காளதேச வங்கி
 இணையதளம்www.bb.org.bd
அச்சடிப்பவர்வங்காள தேச பத்திரமான அச்சடிப்பு நிறுவனம்
 இணையதளம்www.spcbl.org.bd
மதிப்பீடு
பணவீக்கம்6.17 %
 ஆதாரம்BBS, ஆகத்து 2015[1]
வங்காளி
இந்தக் கட்டுரை வங்காள உரை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு பிழையாகக் காட்டப்படும்.

வங்காளதேச இட்டாக்கா (வங்காள மொழி: টাকা, குறி: அல்லது Tk, குறியீடு: BDT) வங்காளதேச மக்கள் குடியரசின் அலுவல்முறை நாணயம் ஆகும். 5க்கும் அதற்கு மேலும் மதிப்புள்ள வங்கித்தாள்களை வங்காளதேச வங்கி வெளியிடுகின்றது. 1, 2 வங்கித்தாள்களையும், நாணயங்களையும் வெளியிடுவது வங்காளதேச அரசின் நிதித்துறை அமைச்சரகத்தின் பொறுப்பில் உள்ளது. பெரும்பாலும் "" என்ற சின்னமும் கடை இரசீதுகளில் "Tk" என்ற குறியும் பயன்படுத்தப்படுகின்றது. 1 100 பைசாக்களாக (வங்காள உச்சரிப்பு:பொய்ஷா) பிரிக்கப்பட்டுள்ளது.

வங்காள மொழியில் இட்டாக்கா என்ற சொல் பணம்,நாணயம்,தாள்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். எனவே வங்காளமொழியில் பேசுமொருவர் எந்த நாணயத்தையும் இட்டாக்கா எனக் குறிப்பிடுவார். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுராவிலும் இந்தியாவின் அலுவல்முறையான இந்திய ரூபாய் "இட்டாக்கா" என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Consumer Price Index (CPI) And Inflation Rate" (PDF). Bangladesh Bureau of Statistics. August 2015. Archived from the original (PDF) on 26 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 Sep 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_இட்டாக்கா&oldid=3599957" இலிருந்து மீள்விக்கப்பட்டது