பேச்சு:திருமணம் (கத்தோலிக்கம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சான்றுகள்[தொகு]

கத்தோலிக்க மறைக்கல்வி(முக்கிய ஆதாரம்) கத்தோலிக்க திருமணம் பற்றி....

திருமறைச்சுவடி

எதிர்பாலினாராக[தொகு]

கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, ஒரு ஆண், பெண்ணை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொள்வதுதான் திருமணம். ஒருபால் திருமணத்தை பாவமாக கருதுகின்றனர். இதற்கான ஆதாரமாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மறைக்கல்வி இணையதளத்தை இணைத்திருந்தேன். இதில் எது நம்பகமற்றது? அல்லது என்ன விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள் அண்டன்? --நிர்மல் (பேச்சு) 19:23, 3 செப்டம்பர் 2015 (UTC)

மணதம்பதியர்கள் இருவரும் திருமுழுக்க பெற்ற கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும். எதிர்பாலினராக இருக்க வேண்டும் என்பது ஆங்கிலத்தில் எப்படி உள்ளது என்பதைக் குறிக்க முடியுமா? இக்கட்டுரை ஒருபக்கச் சார்பான கிறித்தவக் கட்டுரையாக அல்லது கிறித்தவக் கலைக்களஞ்சியம் போன்று எழுதப்பட்டுள்ளது. இது பொதுக்கலைக்களஞ்சியக் கட்டுரையாக எழுதப்பட வேண்டும். ஆதாரம் என்பதில் வெளி இணைப்புக்களை இணைப்பது ஆதாரமாக என்பதனையும் கவனிக்க. இதனையும் பார்க்க - en:Homosexuality and Roman Catholicism. --AntanO 04:27, 4 செப்டம்பர் 2015 (UTC)
நீங்கள் இணைத்த கட்டுரையில் (en:Homosexuality and Roman Catholicism) இதற்கான விடை தெளிவாக உள்ளதே. கத்தோலிக்கக் கிறிஸ்தவம் ஒருபால் திருமணத்திற்கு எதிரானதென்று. யாரே ஒருவர் தவறு செய்துவிட்டு இவ்வாறு திருச்சபையில் இருக்க வேண்டும் என்று சொன்னால் கண்டிப்பாக திருச்சபை ஏற்காது. ஒன்றை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். பொது கட்டுரையில் தான் ஒரு மதம் சார் கருத்துக்கள் இருக்கக் கூடாது. ஆனால் இக்கட்டுரை கிறிஸ்தவ சடங்கு முறைகளில் ஒன்றை பற்றி கூறுவதாகவே உள்ளது. இதில் யாரோ கூறும் விஷம கருத்துக்களை இணைக்க முடியாது. இதே நிலைமை பிற மத கட்டுரைகளில் நீடித்தால் நிலைமை என்னவாகும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். இல்லை நீங்கள் சொல்வது சரியென்றால் அதிகமான பிற மத கட்டுரைகளில் நான் இதே கேள்வியை கேட்க வேண்டியிருக்கும்.

--நிர்மல் (பேச்சு) 05:58, 4 செப்டம்பர் 2015 (UTC)

மணதம்பதியர்கள் இருவரும் திருமுழுக்க பெற்ற கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும். எதிர்பாலினராக இருக்க வேண்டும் என்பது உசாத்துணையில் எப்படி உள்ளது என்பதைக் குறிக்க முடியுமா? --AntanO 07:47, 4 செப்டம்பர் 2015 (UTC)

1625 The parties to a marriage covenant are a baptized man and woman, free to contract marriage, who freely express their consent; "to be free" means:

- not being under constraint;

- not impeded by any natural or ecclesiastical law.

1633 In many countries the situation of a mixed marriage (marriage between a Catholic and a baptized non-Catholic) often arises. It requires particular attention on the part of couples and their pastors. A case of marriage with disparity of cult (between a Catholic and a non-baptized person) requires even greater circumspection.--நிர்மல் (பேச்சு) 12:38, 6 செப்டம்பர் 2015 (UTC)

இவ் ஆங்கிலப் பகுதிகளுக்கும் தமிழ் நடைக்கும் எவ்வாறு ஒத்த தன்மைகளுள்ளன? எ.கா: மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும். எதிர்பாலினராக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற ஆங்கில வசனம் எங்கேயுள்ளது. --AntanO 13:27, 7 செப்டம்பர் 2015 (UTC)

"the situation of a mixed marriage (marriage between a Catholic and a baptized non-Catholic) often arises." பொதுவாக கத்தோலிக்க திருமணம் கத்தோலிக்க ஆணுக்கும், கத்தோலிக்க பெண்ணுக்குமிடையே தான் நடைபெறும். சில வேளைகளில் மணதம்பதியர்களில் ஒருவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவராகவும், மற்றொருவர் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்க அல்லாத கிறிஸ்தவராக இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதை பத்தி 1633 சுட்டுகிறது.இதை சுருக்கமாக "மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும்" என குறிப்பிட்டிருந்தேன். மணதம்பதியர்களில் ஒருவர் கூட கத்தோலிக்கர் இல்லமால் கத்தோலிக்க மதத்தில் எப்படி திருமணம் செய்து வைப்பர்? இது கூட உங்களுக்கு தெரியாதா என்ன? எதிர்பாலினராக அதாவது மணதம்பதியர்கள் ஆண், பெண்ணாக இருக்கவேண்டும் என ஏற்கனவே இந்த உரையாடல் தொடக்கத்தில் நீங்கள் இணைத்த கட்டுரையே தெளிவு படுத்துக்கிறது. மேலும் The parties to a marriage covenant are a baptized man and woman திருமணம் திருமுழுக்கு பெற்ற ஆண், பெண்ணுக்கும் இடையே.... இதை புரியமுடியாதா என்ன? இல்லை அந்த தமிழ் வார்த்தைக்கு அப்படியே ஆங்கில மொழிபெயர்ப்பு தேடுகிறீர்களா? --நிர்மல் (பேச்சு) 13:06, 9 செப்டம்பர் 2015 (UTC)

இது கூட உங்களுக்கு தெரியாதா என்ன?, இதை புரியமுடியாதா என்ன? போன்ற தேவையற்ற கேள்விகளை விடுத்து விடயத்துடன் உரையாடவும். In many countries the situation of a mixed marriage (marriage between a Catholic and a baptized non-Catholic) often arises. It requires particular attention on the part of couples and their pastors. A case of marriage with disparity of cult (between a Catholic and a non-baptized person) requires even greater circumspection. என்பதற்கு "மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும்" என்ற மொழிபெயர்ப்பு சரியானதல்ல. ஆகவே, கருத்துப்பிழையுள்ள அல்லது பொருத்தமற்ற விடயத்திற்கு உசாத்துணை சேர்த்தால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தலாம். ஒன்றில் அது திருத்தப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். --AntanO 13:42, 10 செப்டம்பர் 2015 (UTC)

உசாத்துணை சரியானதா இல்லையா என்பதை இரண்டாவது முடிவு செய்யலாம். முதலில் இதில் "மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும்" என்ன நம்பகதன்மை இல்லை என்பதை விளக்குங்கள்?--நிர்மல் (பேச்சு) 06:42, 11 செப்டம்பர் 2015 (UTC)

மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்காவிட்டால் கத்தோலிக்க திருமணம் எப்படி நடைபெறும் என்பதையும் விளக்குக?--நிர்மல் (பேச்சு) 06:51, 11 செப்டம்பர் 2015 (UTC)

உசாத்துணைக்கு அப்படியே தமிழாக்கம் செய்துவிட்டு சரியானதா என்று பார்க்கும் நடைமுறைதான் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளதோ? அதனுடைய உட்பொருளை எடுக்கக் கூடாதென்று எங்கும் கூறப்படவில்லை. மேலும் நம்பமுடியும் தன்மையுள்ள வாக்கியங்களுக்கு நம்பகதன்மை இல்லை என வார்ப்புரு இடுவது வேடிக்கையாக உள்ளது!--நிர்மல் (பேச்சு) 07:09, 11 செப்டம்பர் 2015 (UTC)

இது கலைக்களஞ்சியம். இங்கு சான்றுகளுடன் எழுதப்பட வேண்டும். எழுதியதற்கு தக்க சான்று இருக்க வேண்டும். என்னுடைய கேள்வி, கருத்துடன் சான்று ஒத்துப் போகின்றதா என்பதேயாகும். இது குறித்து இன்னும் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. முடிந்தால் கட்டுரையை மேம்படுத்துங்கள் அல்லது அப்படியே விட்டுவிடுங்கள். --AntanO 17:15, 11 செப்டம்பர் 2015 (UTC)

நம்பகம தன்மையற்றது எனில் எதனால் நம்பகதன்மையற்றது என விளக்குக. அல்லது அந்த வார்புருவை நீக்குக. மணதம்பதியர்களில் ஒருவர் கண்டிப்பாக கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இருக்கவேண்டும் என்பது நம்பகம தன்மையற்றது என்பதை ஏற்க முடியாது.--நிர்மல் (பேச்சு) 06:18, 12 செப்டம்பர் 2015 (UTC)

திரும்பத் திரும்ப ஒரே கருத்தை எத்தனை தரம் சொல்வது. இதைப் படிக்கவும்: en:Template:Dubious --AntanO 06:24, 12 செப்டம்பர் 2015 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

இது கத்தோலிக்கம் தொடர்பான கட்டுரையாதலால் திருமணம் (கத்தோலிக்கம்) அல்லது திருமணம் (கத்தோலிக்க அருட்சாதனம்) என இருக்க வேண்டும். --AntanO 17:23, 11 செப்டம்பர் 2015 (UTC)