க. பத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. பத்மநாதன்
K. Pathmanathan
அம்பாறை மாவட்ட நாடாம்முமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2009
பின்னவர்தோமசு வில்லியம், ததேகூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-05-30)30 மே 1948
இறப்பு21 மே 2009(2009-05-21) (அகவை 60)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வேலைஅரசு அதிகாரி

கனகசபை பத்மநாதன் (Kanagasabai Pathmanathan, 30 மே 1948 - 21 மே 2009) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கனகசபை பத்மநாதன் அம்பாறை மாவட்டம், காரைதீவில் இளையதம்பி கனகசபை, சின்னத்தம்பி பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை, கல்முனை பாத்திமா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இலங்கைக் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் வவுனியா கட்டிடப்ப் பொருட்கள் திணைக்களத்தில் பணியாற்றினார்.[1] அரசியலுக்கு வரும் முன்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[2]

அரசியலில்[தொகு]

பத்மநாதன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 29,002 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3]

பத்மநாதன் 2009 மே 21 அன்று சிறிது கால சுகவீனமற்ற நிலையில் மதுரையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மண்ணை மாண்புறச்செய்த மைந்தரின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி". karaitivu.org. 4 சூன் 2013. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "TNA parliamentarian Kanagasabai passes away". தமிழ்நெட். 21 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பத்மநாதன்&oldid=3547261" இலிருந்து மீள்விக்கப்பட்டது