ஐசாக் தம்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசாக் தம்பையா
Rev. Isaac Tambyah
1930 இல் ஐசாக் தம்பையா
பிறப்பு(1869-08-19)19 ஆகத்து 1869
மானிப்பாய், யாழ்ப்பாணம்
இறப்பு1941 (அகவை 71–72)
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஇறையியலாளர், எழுத்தாளர்
சமயம்கிறித்தவர்
பெற்றோர்ஆறுமுகம் தம்பிப்பிள்ளை
வாழ்க்கைத்
துணை
மங்களநாயகம் தம்பையா

தம்பிப்பிள்ளை ஐசாக் தம்பையா (Rev. Tambi Piḷḷai Isaac Tambyah, 19 ஆகத்து 1869 - 1941) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஐசாக் தம்பையா யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த ஆறுமுகம் தம்பிப்பிள்ளை (இறப்பு: பெப்ரவரி 5, 1905) என்பவருக்கு 1869 ஆகத்து 19 இல் பிறந்தவர்.[1] தந்தை தம்பிப்பிள்ளை ஆசிரியரும், மானிப்பாய் செம்பா உடையார் என்பவரின் பேரனும் ஆவார்.[1]

ஐசாக் தம்பையா தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித தோமையர் கல்லூரியிலும் கற்றார்.[1] தோமையர் கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார். இளம் வயதிலேயே Garland of Ceylon verses, By the Bridge ஆகிய இரண்டு கவிதை நூல்களை எழுதி வெளியிட்டார்.[1]

பணி[தொகு]

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் கொழும்பு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். 1899 ஆம் ஆண்டில் சட்டவாளராக அங்கீகரிக்கப்பட்டு,[1] 1901 வரை கொழும்பிலும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றி பின்னர் மீண்டும் 1908 ஆம் ஆண்டில் மீண்டும் கொழும்பு திரும்பி உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப்[2] பணியாற்றினார்.[3]

Ceylon Law Review என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3][4] 1904 ஆம் ஆண்டில் The Christian Review என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்.[3]

1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் சட்டவாளர் கழகத்தில் (Gray's Inn) உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தின் எழுத்தாளர்களின் ஒருங்கிணைந்த கழகத்தின் (Incorporated society of authors) உறுப்பினராகவும் சேர்ந்தார். இக்கழகத்தில் இணந்த முதலாவது இலங்கையர் இவரே.[3] பின்னர் 1913 ஆம் ஆண்டில் அங்கிருந்து மலாயா சென்று பினாங்கு மாநிலத்தில்]] வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இறையியல்[தொகு]

ஐசாக் தம்பையா மலாயாவில் இருந்த போது இறையியல் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அவர் இறையியலில் பட்டம் பெற்று திருச்சபையில் குருவானவராகப் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பி தமது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு முழு நேர இறையியலில் நாட்டம் செலுத்தினார்.[5] 1924 இல் உதவிக்குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அடுத்த இரண்டாண்டுகளில் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டு சுண்டிக்குளி பரி. யோவான் திருச்சபையில் பணியில் அமர்த்தப்பட்டார்.[1] அங்கு அவர் 1938 வரை பணியாற்றினார். பின்னர் பண்டாரவளையில் முதன்மைக் குருவாகப் பணியில் அமர்த்தப்பட்டார்.[5] 1940களின் ஆரம்பத்தில் கொழும்பு சான் செபஸ்டியன், புனித திரித்துவத் திருச்சபையில் பணியாற்றினார். கொழும்பு இறையியல் பாடசாலையில் துணை அதிபராகவும் பணியாற்றியிருந்தார்.[1]

சமூகப் பணிகள்[தொகு]

1934 சூன் 9 அன்று யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆரம்பிக்கும் நோக்கோடு நிறுவப்பட்ட குழுவின் துணைத் தலைவராக ஐசாக் தம்பையா இருந்துள்ளார்.[6]

குடும்பம்[தொகு]

ஐசாக் தம்பையா தெல்லிப்பழையைச் சேர்ந்த ஜே. டபிள்யூ. பார் குமாரகுலசிங்க முதலியார் என்பவரின் இளைய மகளான மங்களநாயகம் என்பவரைத் திருமணம் புரிந்தார். மங்களநாயகம் நொறுங்குண்ட இருதயம் என்ற பெயரில் 1914 ஆம் ஆண்டிலும்,[3][7][8] அரியமலர் என்ற பெயரில் 1926 இலும்[7] இரண்டு புதின நூல்களை எழுதினார். இவரது தந்தை குமாரகுலசிங்க முதலியார் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.[3]

எழுதிய நூல்கள்[தொகு]

  • A Garland of Ceylon Verse 1837-1897, Colombo: Ceylon Printing Works, 132 பக்கங்கள்[9]
  • Psalms of a Saiva Saint, 1925[10]
  • Gleams of God: A Comparative Study of Hinduism, Buddhism, and Christianity, 1925[11]
  • Digests of the Law of Contract and Commentary on the Ceylon Penal Code, 1897: கொழும்பு[4][12]
  • In the Days of Sambasiva, 1932

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 எஸ். ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 16–17. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. "The Revised Reports of Ceylon" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.308
  4. 4.0 4.1 Wright, Arnold. "Twentieth Century Impressions of Ceylon". Asian Educational Services. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. 5.0 5.1 "DR. ISAAC TAMBYAH". பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. சுப்பிரமணியம் சோமசுந்தரம் (5 அக்டோபர் 2004). "Manipay Hindu College in my time - an alumnus remembers". டெய்லி நியூசு. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. 7.0 7.1 "Barr-Kumarakulasinghe's and other families". Archived from the original on 4 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  8. கா. சிவத்தம்பி. "யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு". சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. Joshi, Irene, compiler, "Poetry Anthologies" பரணிடப்பட்டது 2009-08-30 at the வந்தவழி இயந்திரம், "Poetry Anthologies" section, "University Libraries, University of Washington" website, "Last updated May 8, 1998", retrieved June 16, 2009. 2009-06-19.
  10. Tambyah, T. Isaac (1925). Psalms of a Saiva Saint. Asian Educational Services. https://books.google.com.au/books?id=5OXbDZNVk28C. 
  11. Tambyah, Tambi-Piḷḷai Isaac (1925), A Comparative Study of Hinduism, Buddhism, and Christianity, Indian Book Gallery, ISBN 978-81-7755-915-6
  12. "A Digest of thw Law of Contract" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசாக்_தம்பையா&oldid=3593972" இலிருந்து மீள்விக்கப்பட்டது