நெட்டிலி அழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெட்டிலி அழகி
சிறகுகளை மூடி அடிப்பகுதியைக் காட்டும் நிலை
அக்காமலைப்பகுதியில் ஈரவுறிஞ்சல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. sarpedon
இருசொற் பெயரீடு
Graphium sarpedon
([[கரோலஸ் லின்னேயஸ்|L.]], 1758)

நெட்டிலி அழகி (Graphium sarpedon) என்பது தெற்காசியா, தென்கிழக்காசியா, கிழக்கு ஆத்திரேலிய பகுதிகளில் காணப்படும் அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி ஆகும். வெவ்வேறு பகுதிகளில் வாழும் 16 உள்ளினங்கள் கண்டறிப்பட்டுள்ளன.

தோற்றம்[தொகு]

இப்பட்டாம்பூச்சி 80 மி.மீ. முதல் 90 மி.மீ. அகலம்வரை இருக்கும். உடலும் இறக்கைகளும் கறுப்புநிறத்தில் இருக்கும். இறக்கைகளின் மேற்புறத்தின் நடுவில் நீலப்பச்சை நிறத்தில் திட்டுகள் உண்டு. பின்னிறக்கைகள் நீண்டிருக்கும். பெண்ணின் இறக்கைகள் அகலமாக இருக்கும். ஆண்பூச்சிக்கு வயிற்றில் மடிப்பொன்று இருக்கும். அதைச்சுற்றி வெண்ணிற மயிர்க்கொத்து இருக்கும்.[1]

வாழிடம்[தொகு]

இது பெரும்பாலும் 5000 அடி உயரத்துக்குக்குக்கீழே அமைந்துள்ள பசுங்காடுகளில் காணப்படும். அங்கு மர உச்சிக்கு மேலே பறக்கும். இவை நகர்ப்புறப்பூங்காக்களிலும் இலவங்கப்பட்டை மரத்தோட்டங்களிலும் காணப்படும். கிழக்கு ஆத்திரேலியாவில் மழைகுறைந்த பகுதிகளுக்கும் இவை பழகியுள்ளன.

பரம்பல்[தொகு]

Subspecies G. s. bingham Woodcut from The Fauna of British India, Including Ceylon and Burma

இவற்றின் உள்ளினப்பரம்பல்:

நடத்தை[தொகு]

மிக விரைவாக நில்லாமல் பறக்கும். பூந்தேன் உறிஞ்சுகையில் படபடவென அடித்துக்கொள்ளும். திறந்த வெளிகளில் வெயில்காயும். ஆண் பூச்சிகள் நீரோடை ஓரத்திலும், விலங்குகளின் சாணம், பறவைகளின் எச்சம் ஆகியவற்றிலும் கூட்டமாக அமர்ந்து நீர் எடுக்கும்.[2]

உணவு[தொகு]

உண்ணிச்செடி மலர்களில் இருந்து தேனுறிஞ்சும் நெட்டிலி அழகி

வளர்ந்த வண்ணாத்திப்பூச்சிகள் பலவகையான பூக்களில் தேனுறிஞ்சும். கம்பளிப்புழுக்கள் இலவங்கப்பட்டை, சாம்பிரானிப்பட்டை (Litsea glutinosa), கொத்துகளா (Miliusa tomentosa), நெட்டிலிங்கம் ஆகிய மரங்களின் இலைகளைத் தின்னும்.[3]

ஆத்திரேலியாவில் இலவங்கப்பட்டை, சாம்பிரானிப்பட்டை மரங்கள் சார்ந்த பேரினத்துக்குட்பட்ட கற்பூரப்பட்டை போன்ற பிற மரங்கள் உணவாகின்றன.

வாழ்க்கைப்பருவங்கள்[தொகு]

முட்டை[தொகு]

இவ்வண்ணத்துப்பூச்சிகள் மஞ்சள்நிற முட்டைகளை உணவுச்செடிகளின் இலைகளில் ஒற்றை வரிசையில் இடுகின்றன.

கம்பளிப்புழு[தொகு]

தொடக்கநாள்களில் கம்பளிப்புழுக்கள் கறுப்பாகவோ, அடர்பச்சைநிறத்திலோ இருக்கும். நிறைய முட்களுடன் காணப்படும். பின்னர் பச்சைநிறத்தில் கழுத்திலும் பின்புறத்திலும் மட்டும் சிறிய முட்களுடன் இருக்கும். நான்காவது அடுக்கில் மஞ்சள் நிறத்தில் ஒரு குறுக்குக்கோடு இருக்கும். இவை இலைகளின் மேற்புறத்தில் நடுவில் இருக்கின்றன. மெதுவாக நகர்கின்றன.

கூட்டுப்புழு[தொகு]

கூட்டுப்புழு பச்சைநிறத்தில் இருக்கும். கழுத்துப்பகுதியில் சிறு கூரான நீட்டம் காணப்படும். இறக்கைக்கூட்டுப்பகுதி மஞ்சளாக பட்டை பட்டையாகக் காணப்படும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Bingham, C. T. (1907) The Fauna of British India, Including Ceylon and Burma. Butterflies. Volume 2.
  2. Mathew, G.; Binoy, C.F. (2002). "Migration of butterflies (Lepidoptera: Rhopalocera) in the New Amarambalam Reserve Forest of the Nilgiri Biosphere Reserve". Zoos' Print Journal 17 (8): 844–847. doi:10.11609/jott.zpj.17.8.844-7. http://www.zoosprint.org/ZooPrintJournal/2002/August/844-847.pdf. பார்த்த நாள்: 2015-09-23. 
  3. Kunte, K. 2006. Additions to known larval host plants of Indian butterflies. J. Bombay Nat. Hist. Soc. 103(1):119-120

மேலும் தகவல்களுக்கு[தொகு]

  • முனைவர் பானுமதி (2015). வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. சென்னை: கிரியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789382394136. 
  • Krushnamegh Kunte (2005). Butterflies of Peninsular India. Universities Press.
  • Meena Haribal (1994). Butterflies of Sikkim Himalaya and their Natural History.
  • W.H. Evans (1932). The Identification of Indian Butterflies. 2nd Ed. Bombay Natural History Society, Madras.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Graphium sarpedon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டிலி_அழகி&oldid=3307915" இலிருந்து மீள்விக்கப்பட்டது